Published : 08 Nov 2014 09:06 AM
Last Updated : 08 Nov 2014 09:06 AM

நிஷி வாசுதேவா - இவரைத் தெரியுமா?

$ ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர். கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் இந்த பொறுப்பில் இருக்கிறார். ஹெச்.பி.சி.எல்-ன் துணை நிறுவனங்களுக்கும் இவர்தான் தலைவர்.

$ 2011-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தில் இயக்குநர் குழுவில் நுழைந்த முதல் பெண் இவர். மேலும் பொதுத்துறை நவரத்னா எண்ணெய் நிறுவனத்தில் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் முதல் பெண்ணும் இவர்தான்.

$ 1979-ம் ஆண்டு இந்த நிறுவனத்தில் இணைந்தார். தலைவராக நியமிக்கப்படும் முன்பு செயல் இயக்குராக இதே நிறுவனத்தில் இருந்தார்.

$ புதுடெல்லியில் இருக்கும் லேடி ராம் கல்லூரியில் பி.ஏ பட்டமும், ஐஐஎம் கொல்கத்தாவில் நிர்வாக பட்டமும் பெற்றவர். ஹார்வேர்ட் நிர்வாக கல்லூரியில் நிர்வாக பயிற்சியும் பெற்றவர்.

$ பிஸினஸ் டுடே பத்திரிகை வெளியிட்ட இந்தியா வியாபாரத்தில் அதிகாரம் மிகுந்த பெண்கள் பட்டியலில் இவரும் இடம் பிடித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x