Published : 02 Jul 2017 11:48 AM
Last Updated : 02 Jul 2017 11:48 AM

இன்ஃபோசிஸ் இயக்குநர் குழுவில் டி.சுந்தரம்

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் டி.சுந்தரம் இணைகிறார். தினசரி அலுவல்கள் அல்லாத இயக்குநராக இருப்பார். வரும் ஜூலை 14-ம் தேதி முதல் இயக்குநர் குழுவில் இணைகிறார்.

டிவிஎஸ் கேபிடல் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக தற்போது சுந்தரம் இருந்து வருகிறார். யுனிலீவர் நிறுவனத்தில் 1975-ம் ஆண்டு இணைந்தார். பல முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தவர்.

நிதி மற்றும் உத்தி வகிப்பதில் டி.சுந்தரம் முக்கிய பங்காற்றுவார் என இன்ஃபோசிஸ் தலைவர் ஆர்.சேஷசாயி கூறினார்.

இன்ஃபோசிஸ் இயக்குநர் குழுவில், ரூபா குட்வா, டாக்டர் புனிதா குமார் சின்ஹா, ரவி வெங்கடேசன், கிரண் மஜூம்தார் ஷா, டி.என்.பிரகலாத் உள்ளிட்டவர்கள் இருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x