Published : 07 Oct 2013 06:00 PM
Last Updated : 07 Oct 2013 06:00 PM

தங்கம் இறக்குமதி அதிகரிக்கும்

தற்போது தேக்க நிலையில் இருக்கும் தங்கம் இறக்குமதி நிதியாண்டு இறுதியில் அதிகரிக்கும் என்று இத்துறையில் உள்ளவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு தங்கம் இறக்குமதி 725 டன் அளவைத் தொடும் என்று அகில இந்திய ஜெம் அண்ட் ஜூவல்லரி வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஹரேM் சோனி தெரிவித்தார். மும்பையில் நடைபெறும் தங்க வர்த்தகம் சார்ந்த மாநாட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது. நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் வரையான காலத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 162 டன்னாகும். ஏப்ரல் மாதத்தில் 118 டன்னும், மே மாதத்தில் 162 டன்னும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஜூன் மாதத்தில் 31 டன்னும், ஜூலையில் 41 டன்னும் இறக்குமதி யாகியுள்ளன.

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்க ளில் முற்றிலுமாக தங்கம் இறக்குமதி செய்யப்படவில்லை. நாட்டின் தங்க நுகர்வு ஆண்டுக்கு 900 டன்னாகும். இதில் 600 டன் நகை உற்பத்திக்கும் 300 டன் முதலீட்டிற்கும் செல்கிறது.

கடந்த ஜூலை 22-ம் தேதி ரிசர்வ் வங்கி பிறப்பித்த கடுமையான உத்தரவை பிறப்பித்ததைத் தொடர்ந்து தங்க இறக்குமதி வெகுவாகக் குறைந்தது.

ராஷ்ட்ரிய ஸ்வர்ண நிவேஷ் திட்டத்துக்கு ரிசர்வ் வங்கியும், செபியும் அனுமதி அளிக்கும் என நம்புகிறது. புழக்கத்தில் இல்லாமல் இருக்கும் தங்கத்தை வெளிக்கொண்டு வருவதே இத்திட்டமாகும். இந்த வகையில் 400 டன் தங்கம் 2014-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வரலாம். தொடக்கத்தில் இத்திட்டத்தில் 500 நகை வடிவமைப்பாளர்களை இணைக்கவும் பிறகு 1,000 ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x