Last Updated : 08 Jun, 2016 11:37 AM

 

Published : 08 Jun 2016 11:37 AM
Last Updated : 08 Jun 2016 11:37 AM

2021-க்குள் இந்தியாவில் 81 கோடி ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள்

இந்தியாவில் 2021-ம் ஆண்டுக்குள் ஸ்மார்ட்போன் பயனாளிகளின் எண்ணிக்கை 81 கோடியாக இருக்கும் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. இது 2015 ல் இருந்த ஸ்மார்ட்போன் பயனாளிகளின் எண்ணிக்கையைப் போல நான்கு மடங்கு அதிகம் என்று அந்த ஆய்வு கூறியுள்ளது.

ஸ்வீடன் நாட்டின் முக்கிய தொலைத் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான எரிக்சன் இது தொடர்பான ஆய்வு ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை 2015-ல் இருந்ததை விட 2021-ல் 15 மடங்கு அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. அது போல மொபைல் டேட்டாவின் பயன்பாடும் அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளது.

2015 ஆண்டு வாக்கில் ஒரு ஸ்மார்ட்போனில் மாதத்துக்கு சராசரியாக 1.4 ஜிபி பயன்படுத்தப் பட்டது என்றால் 2021க்குள் இந்த அளவு 7 ஜிபியாக அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.

2ஜி தொழில்நுட்பத்தை பயன் படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2016 வரை அதிகரித்து வருகிறது. இதன் அடுத்த கட்டமாக வாடிக்கையாளர்கள் 2 ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறையும், இதற்கேற்ப தொலைதொடர்பு நிறுவனங்கள் 3ஜி தொழில் நுட்பத்தை இந்த வாடிக்கை யாளர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ப முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதுபோல ஸ்மார் ட்போன்களின் விலையும் குறைந்து வருகிறது. மேலும் ஸ்மார்ட்போனுடன் நெட் டேட்டாவை இணைத் தும் நிறுவனங்கள் வழங்குவது அதிகரிக்கும் என்று ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

எல்டிஇ தொழில்நுட்பத்திலான 3ஜி மற்றும் 4ஜி சேவை அளிக்கும் நிறுவனங்களின் லாபம் வேகமெடுக்கும் என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது. மேலும் இந்தியாவில் 2021 ஆம் ஆண்டுக் குள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை 65 சதவீதம் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.

டபிள்யூசிடிஎம்ஏ/ ஹெச்பிஏ தொழில்நுட்பம் 2021 ஆண்டுக்குள் 90 சதவீத மக்களுக்கு சென்று சேர்ந்திருக்கும் என்றும், எல்டிஇ தொழில்நுட்பத்திலான சேவைகள் 2021 ஆண்டுக்குள் 45 சதவீத மக்களுக்கு சென்று சேரும் என எதிர்பார்ப்பதாகவும் எரிக்சன் இந்தியா நிறுவனத்தின் மண்டல தலைவர் பாலோ கொலில்லா குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கையின்படி இந்திய ஸ்மார்ட்போன் பயனாளி கள் முக்கியமாக தொலை பேசு வதற்கு அதிக டேட்டா செலவு செய்கின்றனர். இதுதான் இந்திய தொலைத்தொடர்பு சேவை வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்று கிறது என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிவினர் விரைவான சேவை மற்றும் டேட்டா கவரேஜ் போன்றவற்றை முக்கிய தேவையாக கருதுகின்றனர் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

போன் மூலம் உடனடி குறுஞ் செய்திகள், இணைய தளம் பயன்படுத்துவது, மற்றும் சமூக வலை தளங்களை பயன்படுத்து வதில் 70 சதவீதத்துக்கு மேற்பட்ட ஸ்மார்ட்போன் பயனாளிகள் தங்களுக்கு கிடைக்கும் தொலை தொடர்பு சேவை குறித்து திருப்தி யாக கருத்துக்களை தெரிவித்துள் ளனர். 60 சதவீதத்துக்கும் மேற்பட் டோர் மொபைல் இண்டர்நெட் மூலம் வீடியோ பதிவிறக்கத்துக் கான நெட்வொர்க் சேவை சிறப் பாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். வீடியோ மூலம் தொடர்பு கொள்ளும் சேவைக்கு 50 சதவீதம்பேர் திருப்தியாக உள்ளது என்றும் கருத்து கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x