Published : 20 Jun 2016 08:55 AM
Last Updated : 20 Jun 2016 08:55 AM

அடுத்த ஆர்பிஐ கவர்னர் யார்?- உர்ஜித் படேல், அருந்ததி பட்டாச்சார்யாவுக்கு வாய்ப்பு

ரகுராம் ராஜன் இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கி கவர் னராக நீடிப்பாரா? இல்லையா? என்ற கேள்விக்கு கடந்த சனிக்கிழமை விடை தெரிந்துவிட்டது.

ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு ரகுராம்ராஜன் எழுதிய கடிதத்தில், இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கி கவர்னராக நீடிக்க விரும்ப வில்லை. திரும்ப அமெரிக்காவுக்கே செல்ல இருக்கிறேன் என்று எழுதியுள்ளார்.

ரகுராம் ராஜனின் முடிவு பல்வேறு விவாதங்களை எழுப்பி யுள்ளது. அதே சமயத்தில் அடுத்த ரிசர்வ் வங்கி கவர்னராக யார் வரப்போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அடுத்த கவர்னர் யார்? என்கிற பட்டியலில் ஒன்பது நபர்களின் பெயர் தொடர்ச்சியாக குறிப்பிடப்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி துணை கவர்னர் உர்ஜித் படேல், பாரத ஸ்டேட் வங்கியின் அருந்ததி பட்டாச்சார்யா, முன்னாள் ஆர்பிஐ துணை கவர்னரான ராகேஷ் மோகன், சுபிர் கோக் ரன், முன்னாள் தலைமை பொரு ளாதார ஆலோசகரான அசோக் லாஹ்ரி, தேசிய பங்குச் சந்தை யின் தலைவரான அசோக் சாவ்லா, பொருளாதார அறிஞரான விஜய் கேல்கர், பொருளாதார விவகாரங்களுக்கான துறையில் செயலாளர் சக்திகாந்த தாஸ், தற்போதைய தலைமை பொருளா தார ஆலோச கர் அர்விந்த் சுப்ரமணியன் என இந்த ஒன்பது பேரில் ஒருவர்தான் அடுத்த ஆர்பிஐ கவர்னராக நியமிக்கப்படலாம் என்று கூறுகின்றனர்.

உர்ஜித் படேல்

ரிசர்வ் வங்கி துணை கவர்னர். இவரது பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. ரகுராம் ராஜனின் வலது கரம் என்று சொல்லக்கூடியவர். 2013-ம் ஆண்டிலிருந்து மத்திய அரசின் நிதிக் கொள்கை குழுவில் இருந்து வருபவர். ரகுராம் ராஜன் எடுத்த முக்கிய சீர்திருத்தங்களுக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர். மத்திய வங்கி ஊழியரே அடுத்த கவர்ன ராக வேண்டும் என்று மத்திய அரசு நினைத்தால் இவர் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

அருந்ததி பட்டாச்சார்யா

எஸ்பிஐ வங்கியின் தலைவர். உர்ஜித் படேலுக்கு அடுத்து இவரது பெயர்தான் அனைவராலும் முன்மொழியப்பட்டு வருகிறது. முன்னாள் பங்கு விலக்கல் துறை அமைச்சரான அருண் ஷோரி கடந்த 15-ம் தேதி அன்று அருந்ததி பட்டாச்சார்யாதான் அடுத்த ஆர்பிஐ கவர்னர். அதானிக்கு 100 கோடி டாலர் கடன் கொடுக்க அருந் ததி பட்டாச்சார்யா கையெ ழுத்து போட்டுவிட்டார். அதனால் அவருக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். போர்ஃப்ஸ் வெளியிட்ட 100 சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில் இடம் பிடித்தவர் என ஏராளமான அம்சங் கள் இவருக்கு சாதகமாக இருக் கின்றன.

அர்விந்த் சுப்ரமணியன்

தற்போது தலைமை பொரு ளாதார ஆலோசகராக இருந்து வருகிறார். ரகுராம் ராஜன் அளவுக்கு சர்வதேச அளவில் ஒரு நன்மதிப்பை கொண்டவர். ராஜனும் அர்விந்த் சுப்ரமணியனும் ஒன்றாக அந்நியச் செலாவணி நிதியத்தில் (ஐஎம்எப்) வேலை செய்தவர்கள். ஆனால் ராஜனின் கொள்கைகளில் சற்று மாறுபட்டவர். சர்வதேச முகமுள்ள ஒருவர்தான் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட வேண்டும் என்று மோடி நினைத்தால் அர்விந்த் சுப்ரமணியனுக்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

அடுத்த ஆர்பிஐ கவர்னர் பதவிக்கு 9 நபர்களின் பெயர்கள் சொல்லப்பட்டு வந்தாலும் உர்ஜித் படேல், அருந்ததி பட்டாச்சார்யா, அர்விந்த் சுப்ரமணியன் ஆகிய மூவருக்குத் தான் அதிக வாய்ப் பிருக்கிறது. ஏனெனில் சீர்திருத்தங் களை தொடருபவராகவும் வங்கி களின் நம்பகத்தன்மையை நிலை நாட்டுபவராக இருந்தால் மட்டுமே இந்திய பொருளாதாரம் வளர்ச் சியை நோக்கி நடைபோடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x