Last Updated : 18 Aug, 2016 10:08 AM

 

Published : 18 Aug 2016 10:08 AM
Last Updated : 18 Aug 2016 10:08 AM

2020-ஆம் ஆண்டுக்குள் 73 கோடி மக்களிடம் இணையதளம் வசதியிருக்கும்

இணையதளம் பயன்படுத்து பவர்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயரும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. குறிப்பாக இந்தி யாவில் 2020 ஆம் ஆண்டுக்குள் 73 கோடி பேர் இணையதளம் பயன் படுத்துவார்கள் என்று கூறியுள்ளது.

இணையதளம் பயன்படுத்து பவர்களின் எண்ணிக்கை கிராமப் புறங்களிலும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் இணையதளம் பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை 2020-ம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயரும் என்று நாஸ்காம் மற்றும் அக்கமய் டெக்னாலஜீஸ் மேற்கொண்ட ‘இந்தியாவின் இணையதள எதிர்காலம்’ என்கிற ஆய்வில் தெரியவந்துள்ளது.

2015 ஆம் ஆண்டில் 35 கோடி பயனாளிகளாக இருந்த எண்ணிக்கை 2020-ம் ஆண்டுக்குள் 73 கோடியாக அதிகரிக்கும் என்று அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

இணையதளம் பயன்படுத்துவதில் சீனாவுக்கு அடுத்து இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இணையதள சந்தை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. புது பயனர்களில் 75 சதவீதம் பேர் கிராமப்புற பயனாளிகளாக இருப்பார்கள். முக்கியமாக பெரும் பாலான புதிய பயனாளிகளில் பிராந்திய மொழியில் தகவல்களை பெறுவார்கள் என்றும் அந்த ஆய்வு விளக்கியுள்ளது.

இந்தியாவின் இணையதள பயன்பாடு அமெரிக்காவை விடவும் அதிகரித்துவிட்டது. சர்வதேச அளவில் 2020 ஆம் ஆண்டுக்குள் 2 வது இடத்தில் இருக்கும். இணை யதளம் இந்தியாவில் கிராமப் புறங்களிலும் வேகமாக ஊடுருவி வருகிறது. இணையதளம் ஒவ் வொருவருக்கும் பல வாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று நாஸ்காம் தலைவர் ஆர். சந்திரஷேகேர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x