Published : 25 Aug 2016 10:07 AM
Last Updated : 25 Aug 2016 10:07 AM

பிரெக்ஸிட், ஜிஎஸ்டியால் குறுகிய காலத்தில் பாதிப்பு: டாடா குழுமத்தின் தலைவர் தகவல்

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி ஆகி யவை காரணமாக குறுகிய காலத்தில் டாடா குளோபல் பெவரேஜஸ் நிறுவனத்துக்கு பாதிப்பு இருக்கும் என டாடா குழுமத்தின் தலைவர் சைரஸ் மிஸ்திரி தெரிவித்தார்.

டாடா குளோபல் பெவரேஜஸ் (டிஜிபிஎல்) நிறுவனத்தின் 53-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய இவர் மேலும் கூறியதாவது:

ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் பட்சத்தில் நிறுவனத்தின் தேயிலை தொழில் பாதிக்கக்கூடும். இது குறித்து மத்திய அரசுடன் விவாதித்து வருகிறோம். அதே சமயத்தில் நீண்ட காலத்தில் பாதிப்பு கணிசமாக இருக்கும். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறி இருப்பதால் வர்த்தகத்தில் சில பாதகங்கள் உருவாகி உள்ளன. இதுவும் தேயிலை தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடும்.

நிறுவனத்தின் தேயிலை வரு மானத்தில் 65 சதவீதம் சர்வதேச செயல்பாடுகளின் மூலம் கிடைக் கிறது. இந்தியாவில் பெரிய வளர்ச்சி இல்லை. அதே சமயத்தில் தேயிலை தொழிலுக்கு பெரிய வாய்ப்பு இருக்கிறது. வளர்ச்சிக்கான பாதைகளில் நிறுவனம் பயணித்து வருகிறது. காபி தொழிலில் மேலும் கவனம் செலுத்துகிறோம். இந்த துறையிலும் நிறுவனங்களை இணைப்பது குறித்து திட்டமிட்டு வருகிறோம். ஹிமாலயன் நீர் வருமானம் கொடுத்து வருகிறது. இனி அந்த பிரிவில் லாபத்தை பெருக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

சீனப்பிரிவை பொறுத்தவரை அந்த தொழிலை மாற்றி அமைக்கத் திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.

சீனாவை சேர்ந்த ஸெஜியான் டீ (Zhejian Tea) நிறுவனத்துடன் இந்த நிறுவனம் கூட்டு சேர்ந்து தேயிலை இறக்குமதி, ஏற்றுமதி, உற்பத்தி, கிரீன் டீ உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்து வருகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x