Published : 20 Jan 2016 09:59 AM
Last Updated : 20 Jan 2016 09:59 AM

ரிலையன்ஸ் லாபம் ரூ.7,290 கோடி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 38.7 சதவீதம் உயர்ந்து 7,290 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 5,256 கோடி ரூபாயாக இருந்தது. நிறுவனத்தின் நிகர லாபம் சந்தை எதிர்பார்ப்புகளை தாண்டி வந்திருக்கிறது. முந்தைய செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 6,720 கோடி ரூபாயாக இருந்தது.

நிறுவனத்தின் சுத்திகரிப்பு வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ஒரு பேரலுக்கு 4 டாலர் என்ற அளவில் வரம்பு (ஜிஆர்எம்) இருந்தது. இப்போது 11.5 டாலராக இருக்கிறது. ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்கு சுத்திகரிப்பு வருமானம் உயர்ந்திருக்கிறது.

அதே சமயம் நிறுவனத்தின் மொத்த வருமானம் 27 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த வருடம் 93,528 கோடி ரூபாயாக இருந்த வருமானம் இப்போது 68,261 கோடி ரூபாயாக சரிந்திருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 2.63 சதவீதம் உயர்ந்து 1,043 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x