Published : 07 Oct 2014 10:26 AM
Last Updated : 07 Oct 2014 10:26 AM

மாருதி சியாஸ் அறிமுகம்

நாட்டின் அதிகபட்ச கார்களை உற்பத்தி செய்யும் மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் நேற்று நடுத்தர ரக செடான் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

`சியாஸ்’ என்ற பெயரில் நாட்டின் பெருநகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் காரின் விலை ரூ. 7.39 லட்சமாகும்.

பெட்ரோலில் செயல்படும் மாருதி சியாஸ் கார் விலை ரூ. 7.39 லட்சத்தில் தொடங்கி ரூ. 10.25 லட்சம் வரை உள்ளது. டீசல் ரக காரின் விலை ரூ. 8.04 லட்சத்தில் தொடங்கி ரூ. 9.80 லட்சம் வரை உள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் உதிரி பாகங்களின் அளவு இந்தக் காரில் 98 சதவீதமாகும். இந்திய செடான் கார் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இது உருவாக்கப்பட் டுள்ளது. பெட்ரோல் கார்கள் 1.4 லிட்டர் என்ஜினுடனும் டீசல் கார்கள் 1.3 லிட்டர் என்ஜினுடனும் வெளிவந்துள்ளது.

இந்த கார் மேம்பாட்டுக்கு மாருதி சுஸுகி நிறுவனம் மற்றும் அதன் சப்ளை நிறுவனங்கள் ரூ. 620 கோடியை முதலீடு செய் துள்ளன. இந்த காரை மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் லத்தின் அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடு களுக்கு ஏற்றுமதி செய்யவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியச் சந்தையில் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா ஆகியவற்றுக்குப் போட்டியாக சியாஸ் இருக்கும். ஹோண்டா சிட்டி விலை ரூ. 7.19 லட்சம் முதல் ரூ. 11.05 லட்சமாகும். ஹூண்டாய் வெர்னா விலை ரூ. 7.39 லட்சம் முதல் ரூ. 11.72 லட்சமாகும். இந்த காருக்கான முன் பதிவு கடந்த மாதம் தொடங்கியது. இதுவரை 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்று நிறுவனத்தின் தென் பிராந்திய பொதுமேலாளர் ராம் சுரேஷ் அகெளா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x