Published : 09 Jul 2016 10:08 AM
Last Updated : 09 Jul 2016 10:08 AM

இவரைத் தெரியுமா?- சித்தார்த்தா பாவா

முன்னணி கால் டாக்ஸி நிறுவனமான மேரு கேப்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2011-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை அபாட் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைவர் (சப்ளை செயின் பிரிவு) பொறுப்பில் இருந்தவர்.

2007-ம் ஆண்டிலிருந்து 2010-ம் ஆண்டு வரை பிரமள் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைவர் (சப்ளை செயின் பிரிவு) பொறுப்பில் இருந்தவர்.

2006-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை யுனிலீவர் நிறுவனத்தின் ஆசிய, ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு பகுதிகளுக்கு இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் (பிடபிள்யூசி) நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்.

இந்திய பட்டய கணக்காளர் பயிற்சி முடித்தவர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x