Published : 25 Oct 2014 03:00 PM
Last Updated : 25 Oct 2014 03:00 PM

ஓன்கார் எஸ். கன்வர் - இவரைத் தெரியுமா?

$ அப்போலோ டயர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர். 1976-ம் ஆண்டு இந்த நிறுவனத்தை ஆரம்பித்தார். இப்போது மூன்று கண்டங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

$ சுகாதாரம் மற்றும் கல்வியில் ஆர்வம் கொண்டவர். Artemis Health Sciences என்னும் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

$ கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் நிர்வாகப்படிப்பு படித்தவர்.

$ 2012-ம் ஆண்டு எர்னஸ்ட் அண்ட் யங் சிறந்த தொழில் முனைவோர் (உற்பத்தி துறை) விருதினை இவருக்குக் கொடுத்தது.

$ ஃபிக்கி அமைப்பின் முன்னாள் தலைவர், டயர் உற்பத்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர், கேரள தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தின் உறுப்பினர், கோழிக்கோடு ஐஐஎம்-ன் இயக்குநர் குழு உறுப்பினர் என பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.

$ கடந்த வருடம் இறுதியில் அமெரிக்காவின் கூப்பர் டயர்ஸ் நிறுவனத்தை தன் நிறுவனத்துடன் இணைத்துக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x