Published : 08 Jan 2017 11:49 AM
Last Updated : 08 Jan 2017 11:49 AM
சர்வதேச அளவில் ஆப்பிள் நிறு வன ஐபோன் விற்பனை சரிந்திருப் பதால் அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் தன்னுடைய சம்பளத்தை 15 சதவீதம் குறைத்துக்கொண்டார்.
கடந்த 2015-ம் ஆண்டு 1.028 கோடி டாலர் அளவுக்கு அவருடைய சம்பளம் இருந்தது. ஆனால் 2016-ம் ஆண்டு அவர் 87.5 லட்சம் டாலர் மட்டுமே சம்பளம் எடுத்துக்கொண்டார். கடந்த 2011-ம் ஆண்டு தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தன்னுடைய சம்பளத்தை குக் குறைத்துக் கொண்டிருப்பதாக ஆப்பிள் தெரிவித்திருக்கிறது.
கடந்த ஆண்டின் விற்பனை 21.56 கோடி டாலர்கள். ஆனால் 22.36 கோடி டாலருக்கு நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை விட 3.7 சதவீதம் விற்பனை சரிந்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT