Last Updated : 29 Feb, 2016 11:22 AM

 

Published : 29 Feb 2016 11:22 AM
Last Updated : 29 Feb 2016 11:22 AM

மத்திய பட்ஜெட் 2016-17 : முக்கிய அம்சங்கள்

வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014 மே 26-ம் தேதி பதவியேற்றது. மத்திய அரசில் நிதியமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஜேட்லி 3-வது முறையாக தனது பட்ஜெட்டை இன்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்தார்.

மத்திய பொது பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:

வரி விவரங்கள்:



* வருமான வரி விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லை.

* புகையிலைப் பொருட்கள் மீதான உற்பத்தி வரி 10 முதல் 15% வரை அதிகரிப்பு

* 35 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட வீட்டுக்கடன் வட்டிக்கு ரூ.50 ஆயிரம் ரூபாய் வரிச் சலுகை. வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே இந்தச் சலுகை செல்லுபடியாகும்.

* 60 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் குறைந்த விலை வீடுகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு.

* வாடகை வீட்டில் வசிக்கும் வருமான வரிதாரருக்கு ரூ60,000 வரை வரிச்சலுகை. வாடகை வீட்டில் வசிப்போருக்கு இதுவரை சலுகை ரூ.24,000 ஆக இருந்தது.



வரிச் சலுகைகள்:

* ஆட்டிசம், பெருமூளை வாதம் போன்ற நோய்கள் தொடர்பான ஆரோக்கிய காப்பீட்டு திட்டத்தின் கீழ் வரும் பொது காப்பீட்டுத் திட்டங்களுக்கு சேவை வரி விலக்கு அளித்தல்.

* இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தி திறன்களுக்கு சுங்க மற்றும் கலால் வரிச் சலுகைகள் வழங்குதல்.

* வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் புதிதாக இணையும் ஊழியர்களுக்கான 8.33% பங்களிப்பை முதல் மூன்று ஆண்டுகளுக்கு அரசே ஏற்கும். | >மேலும் தகவல் அறிய: பிஎஃப் நிதியில் 3 ஆண்டு நிறுவன பங்களிப்பை அரசே வழங்கும் |

* சிறு தொழிலில் கடன் வழங்க முத்ரா திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு 1,80,000 கோடியாக உயர்வு

* ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்துக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* பொதுத்துறை வங்கிகளின் முதலீட்டை மேம்பாட்டுக்கு ரூ.25,000 கோடி நிதி ஒதுக்கீடு.

* ஸ்டார்ட் அப் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் கம்பெனி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.

* பருப்பு வகைகள் கையிருப்பை உறுதி செய்ய ரூ.900 கோடி ஒதுக்கீடு.

* நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த 2016-17 பட்ஜெட்டில் மாற்றத்துக்கான அலுவல் அடிப்படையில் 9 தூண்கள் இடம்பெற்றிருந்தன. | >முழு விவரம்: ஜேட்லி அறிவித்த 2016 பட்ஜெட்டின் 9 தூண்கள் |

* தீனதயாள் உபாத்யாய, குரு கோவிந்த் சிங் பிறந்த நாள் விழாக்களுக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.

* 2016-17 நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை 3.5% ஆக இருக்கும் என கணிப்பு.

* மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்.

* நாடு முழுவது 160 விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும்.

* 1,500 திறன் மேம்பாட்டு மையங்களுக்காக ரூ.1700 கோடி நிதி ஒதுக்கீடு.

* உட்கட்டுமான துறைக்கு ரூ.2.31 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.

* அரசு வழங்கும் மானியத் தொகைகள் தேவைப்படுவோருக்கு நேரடியாகச் சென்றடையுமாறு ஆதார் அட்டைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. > | விரிவான செய்திக்கு: ஆதாருக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்க மத்திய அரசு முடிவு |

கல்வித் துறை:

1. 10 அரசு கல்வி நிறுவனங்களும், 10 தனியார் கல்வி நிறுவனங்கள் உலகத்தரத்துக்கு மேம்படுத்தப்படும்.

2. பள்ளிச் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புச் சான்றிதழ்கள் டிஜிட்டல் ஆவணங்களாகவும் வழங்கப்படும்.

3. அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக 62 நவோதயா பள்ளிகள் தொடங்கப்படும்.

* 2016-17 நிதியாண்டில் சாலை, ரயில் போக்குவரத்துத் துறைக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.2.18 லட்சம் கோடி.

* அடுத்த இரண்டு ஆண்டுகளில் வறுமைக்கோட்டின் கீழ் இருக்கும் 5 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு, அந்தந்த குடும்பத்திலுள்ள பெண்களின் பெயரில் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* அனைத்து மாவட்ட சுகாதார மையங்களிலும் டயாலஸிஸ் சிறப்பு முகாம்கள் அவ்வப்போது நடத்தப்படும். டயாலஸிஸ் சிகிச்சைக்கான சில மருத்துவ உபகரணங்களுக்கு அனைத்து விதமான சுங்கவரியிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்.

* பொதுத் துறை - தனியார் துறை பங்களிப்பில் தேசிய டயாலஸிஸ் சேவை திட்டம் தொடங்கப்படும்.

* பிரதான் மந்திரி ஜன் அவுசாதி யோஜனா திட்டத்தின் கீழ் தரமான பொது மருந்துகள் கிடைக்கும் வகையில், நாடு முழுவதும் 3000 அரசு மருந்துக் கடைகள் தொடங்கப்படும்.

* ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ சேவை அளிக்கும் வகையில் அரசு மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கப்படும்.

* எஸ்.சி. / எஸ்.டி (தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின) தொழில் முனைவோருக்காக சிறப்பு மையம் அமைக்கப்படும்.

* கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மொத்தம் ரூ.87.769 கோடி ஒதுக்கீடு.

* அடுத்த 3 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 6 கோடி இல்லங்களில் கணினி அறிவியல் அறிவை வளர்ப்பதற்கு இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* கால்நடை நலன் பேண 4 பிரத்யேக திட்டங்கள் அமல்.

* பிரதான் மந்திரி கிராமின் சடக் யோஜனா திட்டத்தின் கீழ் சாலைப் பணிகளுக்காக ரூ.19,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* பிரதான் மந்திரி கிருஷி சிச்சாய் யோஜனாவின் கீழ் 28.5 லட்சம் ஹெக்டே விளைநிலத்துக்கு நீர்ப்பாசன வசதி ஏற்படுத்தப்படும்.

* கிராமப்புறம் மற்றும் நகராட்சி நிர்வாகங்களுக்கு ரூ.2.87 கோடி நிதி ஒதுக்கீடு.

* 'தூய்மை இந்தியா' திட்டத்துக்கு ரூ.9,000 கோடி நிதி ஒதுக்கீடு.

* விவசாயிகள் வருமானத்தை அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ப விவசாய கொள்கைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.

* நீர்பாசன திட்டங்களுக்காக நபார்டு வங்கியில் பிரத்யேகமாக ரூ.20,000 கோடி முதலீட்டில் நீப்பாசன நிதியம் உருவாக்கப்படும்.

* இயற்கை வேளாண் முறையை ஊக்குவிக்க ரூ.412 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மழை வளம் நிறைந்த பகுதிகளில் இயற்கை வேளாண் முறையில் மகசூலை பெருக்க இரண்டு திட்டங்கள் அறிமுகம்.

* 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.38,500 கோடி நிதி ஒதுக்கீடு. கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக இவ்வளவு பெரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இது முதன்முறையாகும்.

* கடலுக்கு அடியில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய ஊக்கத்தொகை வழங்கப்படும்.

* 89 நீர்ப்பாசன திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்படும்.

* பிரதமரின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.5,500 கோடி ஒதுக்கீடு.

* வேளாண் பொருட்களுக்கான ஆன்லைன் சந்தை அம்பேத்கர் பிறந்தநாளில் தொடங்கப்படும்.

* வேளாண் சந்தைகள் இணையதளம் மூலம் இணைக்கப்படும்.

* விவசாயம் சார்ந்த கடன்களுக்காக ரூ.9 லட்சம் கோடி ஒதுக்கீடு.

* பிரதான் மந்திரி கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்யப்படும். (இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க புதிய திட்டம்)

* விவசாயத்துறை 35,984 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. | >முழுமையான தகவலுக்கு: இயற்கை வேளாண் முதல் ஆன்லைன் சந்தை வரை: விவசாயிகளுக்கு 13 முக்கிய அறிவிப்புகள் |

* 2015- 16 நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7.6% ஆக அதிகரித்துள்ளது.

* 2016-17 நிதியாண்டு அரசுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்

* 7-வது ஊதிய கமிஷன், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டங்களால் 2016-17 நிதியாண்டில் கூடுதல் நெருக்கடி ஏற்படும்.

"உலகளவில் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையிலும்கூட இந்தியப் பொருளாதாரம் எட்டாத உயரத்தை எட்டியிருக்கிறது. சவால்களை நாம் வாய்ப்புகளாக பயன்படுத்திக் கொண்டு பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளோம்"

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x