Published : 12 Jun 2016 11:38 AM
Last Updated : 12 Jun 2016 11:38 AM

வாரன் பஃபெட்டுடன் மதிய உணவு சாப்பிட ரூ.22.7 கோடி

அமெரிக்காவின் முக்கிய பணக்காரர் களில் ஒருவரான வாரன் பஃபெட், தன்னுடன் மதிய உணவு சாப்பிட விரும்புவரை ஏலத் தொகை மூலம் முடிவு செய்கிறார். இந்த தொகை சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள அறக் கட்டளைக்கு கொடுக்கப்படும். இந்த முறை ரூ.22.7 கோடிக்கு (34 லட்சம் டாலர்) ஏலம் கேட்கப்பட்டிருக்கிறது.

கடந்த வெள்ளி அன்று வெற்றி யாளர் முடிவு செய்யப்பட்டார். 3,456,789 டாலருக்கு ஏலம் கேட்டார். கடந்த 2012-ம் ஆண்டும் இதே தொகைக்கு ஏலம் கேட்கப்பட்டது. இந்த ஏலம் இபே இணையதளம் மூலம் நடத்தப்பட்டது. வாரன் பஃபெட் இதுவரை 2 கோடி டாலர் வரை நிதி திரட்டி இருக்கிறார். வாரனின் முதல் மனைவி சுசி (Susie) மூலம் கிளைட் அறக்கட்டளை அவருக்கு தெரிய வந்தது. சூசி 2004-ம் ஆண்டு இறந்துவிட்டாலும் கிளைட் அறக்கட்டளைக்கு தொடர்ந்து வாரன் உதவி வருகிறார்.

இந்த ஏலத்தில் எனக்கும் பங்கு இருக்கிறது எனும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என்று ஏலத்தின் போது வாரன் தெரிவித்தார். இந்த அறக்கட்டளை பலருக்கு வேலை, உணவு, சுகாதாரம் என பல விஷயங்களிலும் உதவியாக இருக்கிறது. உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு இந்த அறக்கட்டளை பாலமாக இருக்கிறது என்றும் கூறினார். வாரன் பஃபெட் அடுத்து எதில் முதலீடு செய்ய இருக்கிறார் என்பதைத் தவிர மற்ற விவாதங்களில் ஈடுபடலாம். பொதுவாக இந்த ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள் யார் என்பது ரகசியமாகவே வைக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x