Published : 18 Oct 2014 12:49 PM
Last Updated : 18 Oct 2014 12:49 PM

ஆலன் மமெடி - இவரைத் தெரியுமா?

$ யாருடைய மொபைலிருந்து அழைப்பு வந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் அப்ளிகேஷனனான ட்ரூ காலர் (Truecaller) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.

$ ஸ்வீடன் நாட்டில் பிறந்தவர். 2009-ம் ஆண்டு தன்னுடைய நண்பர் Nami Zarringhalam உடன் இணைந்து இந்த அப்ளிகேஷனை உருவாக்கினார். அப்போது இவருக்கு வயது 25.

$ இணையதளத்தில் வெளியிட்ட ஒரு வாரத்தில் 10,000 பேர் இந்த அப்ளிகேஷனை டவுன்லோடு செய்தனர். இருந்தாலும் 2010-ம் ஆண்டுதான் ஏற்கெனவே செய்த வேலையை விட்டு விலகினார்.

$ ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் இருக்கும், ராயல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் பி.எஸ்.இ. கம்யூட்டர் சயின்ஸ் படித்தவர்.

$ ஒவ்வொரு வாரமும் 6 லட்சம் இந்தியர்கள் இந்த அப்ளிகேஷனை டவுன்லோடு செய்கிறார்கள்.

$ ட்ரூ காலர் ஆரம்பிப்பதற்கு முன்பு, Birdstep Technology நிறுவனத்தில் பணிபுரிந்திருக்கிறார். மேலும் நண்பர்களுடன் சேர்ந்து சில நிறுவனங்களை நடத்தி இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x