Published : 22 Jan 2017 01:30 PM
Last Updated : 22 Jan 2017 01:30 PM

பின்லாந்து நிறுவனத்தை வாங்குகிறது மதர்சன் சுமி

இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான மதர்சன் சுமி, பின்லாந்தைச் சேர்ந்த பிகேசி குழுமத்தை வாங்க முடிவெடுத்திருக்கிறது. இந்த இணைப்பின் மதிப்பு ரூ.4,150 கோடி யாகும். இதன் மூலம் 2020-ம் ஆண்டு 1,800 கோடி டாலர் வருமான இலக்கை மதர்சன் சுமி நிர்ணயம் செய்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் மதர்சன் சுமி நிறுவனத்தின் வருமானம் 570 கோடி டாலர் ஆகும். பிகேசி குழுமத்தின் ஆண்டு வருமானம் 100 கோடி டாலர்கள் ஆகும். இந்த நிறுவனம் வயரிங் பிரிவில் செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா, பிரேசில், சீனா, ரஷ்யா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 22,000 பணியாளர்கள் இருக்கிறார்கள். இந்த நிறுவனம் நாஸ்டாக் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

வயரிங் பிரிவு எங்களுக்கு முக்கியமானது ஆகும். மொத்த வருமானத்தில் 14-15 சதவீதம் வரை இந்த பிரிவில் வருகிறது. புதிய நிறுவனத்தின் இணைப்புக்கு பிறகு இந்த பிரிவின் வருமானம் இரு மடங்காக உயரும். வட அமெரிக்கா எங்களுடைய முக்கியமான சந்தையாகும் என தலைமை நிதி அலுவலர் ஜிஎன் கௌபா தெரிவித்தார். மேலும் கடந்த செப்டம்பரில் 1,993 கோடி ரூபாய் நிதி திரட்டினோம். நிறுவனத்தில் உபரித்தொகை இருப்பதால் இந்த இணைப்புக்காக கடன் வாங்க தேவையில்லை என்றும் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x