Published : 22 Jul 2016 10:45 AM
Last Updated : 22 Jul 2016 10:45 AM

இவரை தெரியுமா?- திலிப்குமார் கந்தேல்லால்

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான சாப் லேப்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநர். 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2011-ம் ஆண்டு மே மாதத்திலிருந்து சாப் லேப்ஸ் நிறுவனத்தினுடைய மேம்பாடு மற்றும் அப்ளிகேஷன் கண்டுபிடிப்பு பிரிவின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

2001-ம் ஆண்டு சாப் லேப்ஸ் நிறுவனத்தில் தொழில்நுட்ப ஆலோசகராக பணிக்குச் சேர்ந்தவர்.

2004-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை சாப் லேப்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவுக்கு மூத்த துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

ஆதித்யா பிர்லா குழுமம், கிராசிம் நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.

மும்பை பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் பிரிவில் இன்ஜினீயரிங் பட்டமும், ஐஎஸ்பி-யில் (ஹைதராபாத்) எம்பிஏ பட்டமும் பெற்றவர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x