Last Updated : 06 Sep, 2016 06:29 PM

 

Published : 06 Sep 2016 06:29 PM
Last Updated : 06 Sep 2016 06:29 PM

ரிலையன்ஸ் வரி ஏய்ப்பு: அதிகாரிகள் விசாரணை

முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ. 25 கோடி அளவுக்கு உற்பத்தி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வரித்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக மத்திய உற்பத்தி வரி புலனாய்வு இயக்குநரக (டிஜிசிஇஐ) அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்குமாறு ரிலையன்ஸ் நிறுவனத்தைக் கேட்டுள்ளனர்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஒன்றான ஹஸிரா ஆலையில் இந்த வரி ஏய்ப்பு நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நாப்தா சுத்திகரிப்பின்போது வெளியாகும் ரசாயன கலவையான ஸைலீன் என்ற கலவையை பெயிண்ட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் விற்பனை செய்துள்ளது. இதை இயற்கை உப பொருள் என்கிற ரீதியில் 12.5 சதவீத உற்பத்தி வரியை ரிலையன்ஸ் செலுத்தியுள்ளது.

ஆனால் இது வேதியியல் உப பொருளாகும். இதற்கான உற்பத்தி வரி 14 சதவீதமாகும். எனவே இது தொடர்பான விவரங்களை அளிக்குமாறு உற்பத்தி வரித்துறை அதிகாரிகள் கோரியுள்ளனர்.

அரசுத்துறை சார்பில் இதுபோன்ற விசாரணை நடைபெறுவது வழக்கமானது. ஏற்கெனவே வகுத்தளிக்கப்பட்ட வழிகாட்டுதலின்படி வரி தொகை செலுத்தப்பட்டுள்ளது என்று ரிலையன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x