Last Updated : 14 Jun, 2016 04:57 PM

 

Published : 14 Jun 2016 04:57 PM
Last Updated : 14 Jun 2016 04:57 PM

தமிழ்நாடு தவிர அனைத்து மாநிலங்களும் ஜிஎஸ்டி-க்கு ஆதரவு: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவுக்கு தமிழ்நாடு தவிர அனைத்து மாநிலங்களும் ஆதரவு அளித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். இந்த மசோதாவில் சில சந்தேகங்கள் தமிழக அரசுக்கு இருப்பதால் இதற்கு ஆதரவு தெரிவிக்க தயக்கம் காட்டுகிறது என்று கூறினார்.

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக்கான வழிகாட்டு தலை உருவாக்கும் அதிகார மளிக்கப்பட்ட அனைத்து மாநில நிதி அமைச்சர்களின் கூட்டம் கொல்கத்தாவில் நேற்று நடை பெற்றது. இக்கூட்டத்தில் பங் கேற்று ஜேட்லி பேசியது:

ஜிஎஸ்டி முறையை அமல் படுத்துவதற்கு எவ்வித காலக் கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை. நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பைக் கொண்டு வருவதுதான் இந்த மசோதாவின் நோக்கம்.

இதற்கு முன்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த மசோ தாவை நிறைவேற்ற காலக் கெடு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் காங் கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதா நிறை வேற்றப்படாமல் முடங்கியுள்ளது.

இந்த மசோதாவை அமல்படுத்த அனைத்து மாநிலங்களும் ஒப்புக் கொண்டுள்ளன. தமிழகம் சில விஷயங்களில் தனது சந்தேகங் களை வெளியிட்டுள்ளது. அத்துடன் சில ஆலோசனைகளையும் அளித் துள்ளது. அந்த ஆலோசனைகளை இந்தக் குழு பரிசீலிப்பதாக ஜேட்லி கூறினார்.

இரண்டு நாள் நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 22 மாநிலங்களிலிருந்து நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். மேற்கு வங்க நிதி அமைச்சர் அமித் மித்ரா, அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலய முதலமைச்சர்களும் இதில் அடங்குவர். டெல்லி துணை முதல்வர் மற்றும் நிதித் துறை மூத்த அதிகாரிகள் பங் கேற்றனர். இந்த கூட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான நிதி அமைச்சர்கள் பங்கேற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.

ஜிஎஸ்டி குழுவின் தலைவர் மற்றும் வருவாய்த்துறைச் செயலர் ஹஸ்முக் ஆதியா உள்ளிட்டோரும் இக்கூட்டத்தில் பங் கேற்றனர். மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பு குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முதல் ஐந்து ஐண்டுகளுக்கு அந்த இழப்பை மத்திய அரசு பார்த்துக் கொள்ளும். எனவே அது குறித்து மாநில அரசுகள் கவலைப்படத் தேவையில்லை என்று ஜேட்லி கூறினார்.

உயர்ந்தபட்ச வரி விதிப்பு அளவை சட்டமாக கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது குறித்து பேசிய ஜேட்லி, இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. இவ் விதம் வரம்பு நிர்ணயித்தால் எதிர் காலத்தில் அதில் மாற்றம் செய்வது கடினமாகிவிடும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் ஜிஎஸ்டி குழுவிடம் விடப்பட்டுள்ளதாக ஜேட்லி கூறினார்.

உற்பத்தி அதிகமாக உள்ள மாநிலங்கள் கூடுதலாக ஒரு சதவீத வரி விதிப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்ட தற்கு இந்த விஷயத்தில் மத்திய அரசு விடாப்பிடியாக இருக்க விரும்பவில்லை. நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கவே விரும்புவ தாகக் குறிப்பிட்டார். ஜிஎஸ்டி என்பது நுகர்வு சார்ந்த வரி விதிப்பு என்பதால் உற்பத்தி மாநிலங்கள் கூடுதலாக ஒரு சதவீத வரியை கோருகின்றன.

மழைக்கால கூட்டத் தொடரில் இந்த மசோதா நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும் என்று குறிப்பிட்ட ஜேட்லி, அதையடுத்து மத்திய ஜிஎஸ்டி மற்றும் மாநில ஜிஎஸ்டி தொடர்பான சட்டமியற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என்றார். அடுத்த கட்ட கூட்டம் ஜூலை மாதம் 2-வது வாரத்தில் நடைபெறும் என்று மித்ரா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x