Published : 29 Jun 2016 10:16 AM
Last Updated : 29 Jun 2016 10:16 AM

இவரைத் தெரியுமா?- ராகேஷ் மல்ஹோத்ரா

லுமினோஸ் பவர் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர். 1988 ஆம் ஆண்டு முதல் இந்த பொறுப்பில் இருந்து வருகிறார். எஸ்ஏஆர் குழுமம், லுமினோஸ் வாட்டர் டெக்னாலஜீஸ், லைவ் கார்ட் எனர்ஜி டெக்னாலஜீஸ் மற்றும் என்குபேட் கேபிடல் பார்ட்னர்ஸ் நிறுவனங்களின் நிறுவனர். வி-யான் டெலிகாம் நிறுவனத்தின் இணை நிறுவனர்.

தொடர் தொழில்முனைவோர். இந்திய ஏஞ்செல் நெட்வொர்க்கில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

முதன் முதலில் யுபிஎஸ் தொழில்நுட்பத்தை இந்தியாவில் முயற்சி செய்தவர். 1985ல் இதற்காக ஓக் பவர் சிஸ்டம்ஸ் என்கிற நிறுவனத்தைத் தொடங்கியவர்.

ஜப்பானின் மிட்ஷுய், ஜெர்மனியின் சீமென்ஸ் நிறுவனத்தின் திட்டப் பொறியாளராகவும், நெல்கோ நிறுவனத்தில் பொறியாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் பிடெக் பட்டம் பெற்றவர், ஹார்வேர்டு பிசினஸ் பள்ளியில் உயர்கல்வி முடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x