Last Updated : 18 Mar, 2018 03:32 PM

 

Published : 18 Mar 2018 03:32 PM
Last Updated : 18 Mar 2018 03:32 PM

செல்லாத 500,1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது தெரியுமா?

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு மூலம் செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்து வருகிறது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் ஊழல், கருப்புப்பணம், கள்ளநோட்டு ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார். இதன்படி நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.15.50 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன.

அதன்பின் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு, பழைய நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இதன்படி ரிசர்வ் வங்கிக்கு ஏறக்குறைய 99 சதவீதத்துக்கும் செல்லாத நோட்டுகள் வந்துவிட்டதாக கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.

இந்நிலையில், செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்து வருகிறது என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் பிடிஐ செய்தி நிறுவனம் கோரி இருந்தது. அதற்கு ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

செல்லாததாக அறிவிக்க ரூ.500, ரூ.1000 நோட்டுகளில் ரூ.15 லட்சத்து 28 ஆயிரம் கோடி நோட்டுகள் வங்கிக்குள் வந்துவிட்டன. செல்லாத நோட்டுகளான 500, 1000 ரூபாய்கள் மிகவும் துல்லியமாக எண்ணப்படும் நவீன எந்திரங்கள் மூலம் எண்ணப்பட்டு வருகின்றது. எண்ணி முடிக்கப்பட்ட நோட்டுகள் நவீன எந்திரங்கள் மூலம் மிகச்சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டு, அதை செங்கல் போன்றவடிவத்தில் நசுக்கப்பட்டு வருகின்றன. இந்த பணி பல்வேறு ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில் நடந்து வருகிறது.

இந்த செல்லாத ரூபாய் நோட்டுகள் எதையும் ரிசர்வ் வங்கி மறுசுழற்சி செய்யவில்லை. செல்லாத நோட்டுகளை எண்ணுவதற்காக மிகவும் உயரிய தொழில்நுட்பம் கொண்ட 59 எந்திரங்கள் பல்வேறு ரிசர்வ் வங்கிஅலுவலகங்களில் வைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x