Last Updated : 14 Dec, 2018 07:51 AM

 

Published : 14 Dec 2018 07:51 AM
Last Updated : 14 Dec 2018 07:51 AM

சக்தி காந்த தாஸ் தலைமையில் இன்று ஆர்பிஐ இயக்குநர் கூட்டம்

ரிசர்வ் வங்கியின் கவர்னராக பொறுப் பேற்றுள்ள சக்தி காந்த தாஸ் தலைமையில் ரிசர்வ் வங்கியின் இயக்குநர் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

கடந்த நவம்பர் 19-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து இக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரி கிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கு கடன் கிடைப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. பண மதிப்பு நீக்கம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கம் ஆகிய காரணங்களால் மிகவும் பாதிக்கப்பட்டு, நிதிப் புழக்கம் குறைந்துள்ள சிறு, குறுந்தொழில் துறையினருக்கு போதிய நிதி கிடைப்பதற்கான வழி வகைகள் இக்கூட்டத்தில் ஆராயப்படும் என்று தெரிகிறது.

ரிசர்வ் வங்கி கவர்னர் பொறுப்பில் இருந்த உர்ஜித் படேலின் பதவிக்காலம் செப்டம்பர் 2019 வரை உள்ளது. ஆனால் கடந்த திங்களன்று திடீரென அவர் சொந்தக் காரணங்களுக்காக பதவி விலகுவதாகத் தெரிவித்து வெளியேறி னார். இதையடுத்து மறு நாளே அதாவது 24 மணி நேரத்தில் ரிசர்வ் வங்கி கவர்ன ராக சக்தி காந்த தாஸை மத்திய அரசு நியமித்தது.

நிர்வாக ரீதியில் முடிவெடுக்கும் அதிகா ரம் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழுவுக்கு உள்ளதா அல்லது ஆர்பிஐ சுதந்திரமாக முடிவுகள் எடுக்க முடியுமா என் பது குறித்து இக்கூட்டத்தில் ஆராயப்படும் முக்கியமான விஷயமாக இருக்கும்.

ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவில் அரசால் நியமிக்கப்பட்ட இரண்டு இயக்கு நர்கள், 11 இயக்குநர்கள் உள்ளனர். தற் போது இயக்குநர் குழுவில் 18 உறுப் பினர்கள் உள்ளனர். இந்த எண்ணிக் கையை 21 ஆக உயர்த்துவதற்கு சட்டத்தில் இடமுள்ளது.

ரிசர்வ் வங்கியின் கவர்னராக பொறுப் பேற்ற உடனேயே, அதன் சுதந்திரமான செயல்பாடுகளுக்கு எந்தவிதமான பாதிப் பும், நம்பகத்தன்மைக்கு கேடு எதுவும் வராத வகையில் தனது செயல்பாடுகள் நிச்சயம் இருக்கும் என்று சக்தி காந்த தாஸ் உறுதியளித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் 25-வது கவர்னராகப் பொறுப்பேற்றுள்ள சக்தி காந்த தாஸ், ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டை எவ்விதம் தீர்மானிக்கப் போகிறார் என்பது வருங்காலங்களில் தெரிந்துவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x