Published : 04 Nov 2018 12:29 AM
Last Updated : 04 Nov 2018 12:29 AM

ரூபே பண பரிமாற்றத்துக்கு முன்னுரிமை அளிக்கும் நரேந்திர மோடி: அமெரிக்க அரசிடம் மாஸ்டர்கார்டு புகார்

இந்திய பிரதமர் நரேந்திரமோடி ரூபே பணப் பரிமாற்றத்துக்கு முன்னுரிமை அளிப்பதாக மாஸ்டர்கார்டு நிறுவனம் புகார் கூறியுள்ளது. மோடி தேசிய கண்ணோட்டத்தில் இருப்பதாகவும் அது குற்றம் சாட்டியுள்ளது. 

மாஸ்டர்கார்டு நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்க அரசிடம் இந்த புகாரினை கூறியுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடி தேசிய கண்ணோட்டத்தில்  இந்தியாவின் ரூபே கார்டு பரிவர்த்தனையை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கிறார். மேலும் இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கைகள் வெளிநாட்டு பணப் பரிமாற்ற நிறுவனங்களை பாதிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளது.

பிரதமர் மோடி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூபே பணப் பரிமாற்ற முறையை அறிமுகம் செய்தார்.  இந்தியாவில் தற்போதுவரை சுமார் 100 கோடி டெபிட், கிரெடிட் கார்டு பணப் பரிமாற்றம் ரூபே வழியாக நடக்கிறது.  இதன் காரணமாக அமெரிக்காவைச் சேர்ந்த  பணப் பரிமாற்ற நிறுவனங்களான மாஸ்டர்கார்டு, விசா ஆகியவற்றின் ஆதிக்கம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் பணப்பரிமாற்ற துறையில் வளர்ந்துவரும் இந்திய சந்தையில் மாஸ்டர்கார்டின் வளர்ச்சி மிகக் கடினமான காலகட்டத்தை சந்தித்துள்ளது.

மோடி நேரடியாக பொதுமக்களிடத்தில் ரூபே பணப் பரிமாற்ற வழியை பரிந்துரைக்கிறார். ரூபே பணப் பரிமாற்றத்தை பயன்படுத்தினால், பரிமாற்றக் கட்டணங்கள் இந்திய நிறுவனங்களுக்கு கிடைக்கும். இதன் மூலம் சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டப்படும் என்றும் வலியுறுத்துகிறார் என்று குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் குழுவிடம் ஜூன் 21-ம் தேதி மாஸ்டர்கார்டு நிறுவனம் புகார் அளித்துள்ளது.

இது தொடர்பாக மாஸ்டர் கார்டு நிறுவனத்தின்  சர்வதேச துணைத் தலைவர் கூறுகையில், தேசிய கண்ணோட்டத்தில் ரூபே பணப் பரிமாற்றத்தை பயன்படுத்துபவர்களை அரசு ஊக்குவிக்கிறது. இந்திய அரசு மின்னணு பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கிறது, தவிர இந்திய நிதித்துறை பாதுகாப்புக்கென புதிய பாதுகாப்பு கொள்கைகளையும்  அளிக்கிறது. இது சர்வதேச நிறுவனங்களுக்கு பாதகமானதாகும்.

பிரதமர் மோடி அரசின் நிதித் துறை பாதுகாப்பு திட்டங்களால் அமெரிக்க நிறுவனங்களுக்கு  பாதிப்புகள் அதிகரித்து வருகின்

றன.  முன்னதாக இந்த நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின்  தகவல்களை இந்தியாவிலேயே சேமிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி இருந்தது.

மாஸ்டர் கார்டின்  புகாரில், பிரதமரும், அரசும் ரூபே பயன்பாட்டை ஊக்குவிப்பதாவும் இதனால் அமெரிக்க பணப் பரிமாற்ற நிறுவனங்களுக்குச் சந்தையைப் பயன்படுத்துவதில் தேக்கம் நிலவுவதாகவும் கூறியுள்ளது.  

இந்திய அரசின் முதலீட்டில் வளரும் நிறுவனம் என்பதால் ரூபேவுக்கு மத்திய அரசு முழுமையான உதவிகளை செய்கிறது.

மாஸ்டர்கார்டு அமெரிக்க வாழ் இந்தியரான அஜய் பங்கா என்பவரால் உருவாக்கப்பட்டது. 2014-2019 ஆண்டு வரை இந்தியாவில்ரூ.100 கோடி வரை முதலீட்டு திட்டங்களை மேற்கொண்டுள்ளது. சர்வதேச அளவில் மாஸ்டர்கார்டு சந்தையில் இந்தியா 14 சதவீதத்தினை வைத்துள்ளது. மாஸ்டர்கார்டு நிறுவனத்துக்கு அமெரிக்காவுக்கு வெளியே மிக முக்கிய சந்தையாக இந்தியா உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x