Published : 16 Nov 2018 08:45 AM
Last Updated : 16 Nov 2018 08:45 AM

ரூ.1,100 கோடி முதலீட்டில் பெங்களூருவில் இன்டெல் மையம் 

இன்டெல் நிறுவனம் இந்தியாவில் இரண்டாவது வடிவமைப்பு மையத்தை பெங்களூருவில் அமைக்கிறது. இதற்காக ரூ.1,100 கோடி முதலீடு செய்ய உள்ளது. இது அமெரிக்காவுக்கு வெளியே இன்டெல் மேற்கொள்ளும் அதிக பட்ச முதலீடாகும். மேலும் பெங் களூருவில் இன்டெல் அமைக்கும் இரண்டாவது மையமாகும்.

இது குறித்து நிறுவனம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், பெங்களூருவில் 44 ஏக்கர் பரப் பளவில் 6,20,000 சதுர அடியில் இந்த மையம் அமைகிறது. குறிப்பாக 1,00,000 சதுர அடிக்கு உலகத் தரத்திலான ஆய்வக கட்டமைப்பு இங்கு அமையும். இந்த மையத்துக்கு எத்தனை பணியாளர் களை பணிக்கு எடுக்க உள்ளது என்கிற விவரத்தினை நிறுவனம் வெளியிடவில்லை.

இன்டெல் நிறுவனத்தின் இந் திய தலைவர் நிவ்ருதி ராய் கூறு கையில், இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப நிறுவனம் தயாராகி வரு கிறது. இதற்கான தொழில்நுட்பங் கள், தயாரிப்புகள் என இண்டெல் தனது விரிவாக்கத்தினை மேற்கொள்கிறது. குறிப்பாக கிளவுட் சேவை, 5ஜி தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவு, என பல முயற்சிகளை மேற் கொண்டுவருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x