Published : 15 Nov 2018 08:48 AM
Last Updated : 15 Nov 2018 08:48 AM

பணவீக்கம் 5.28 சதவீதமாக உயர்வு 

மொத்த விலை குறியீடு அடிப்படை யிலான பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 5.28 சதவீதமாக உயர்ந் துள்ளது. பெட்ரோல் விலை ஏற்றம் காரணமாக கடந்த நான்கு மாதங் களைவிட அக்டோபர் மாதத்தில் மொத்த விலை குறியீடு அதிகரித் துள்ளது. எனினும் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு தற்போது சீரான நிலை யில் உள்ளதால், இந்த போக்கினை தக்கவைத்துக் கொள்ள ரிசர்வ் வங்கி முயற்சிகளை மேற்கொள் ளும் என எதிர்பார்க்கப்படு கிறது.

மத்திய புள்ளியியல் துறை இது தொடர்பான விவரங்களை வெளி யிட்டுள்ளது. அதில் மொத்த விலை குறியீட்டின் அடிப்படையிலான பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 5.28 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் 5.13 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 3.68 சதவீதமாக இருந்தது.

உணவுப் பொருட்களின் விலை அக்டோபர் மாதத்தில் 1.49 சதவீதம் அதிகரித்துள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் 0.21 சதவீதமாக இருந் தது. காய்கறிகளின் விலை ஏற்றம் அக்டோபர் மாதத்தில் 18.65 சத வீதம் அதிகரித்திருந்தது. இது அதற்கு முந்தைய மாதத்தில் 3.83 சதவீதமாக இருந்தது.

எரிபொருள் மற்றும் மின்சாரத் தின் விலை அக்டோபர் மாதத்தில் 18.44 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் 16.65 சதவீமாக இருந்தது. எல்பிஜி பெட்ரோலியம் காஸ் விலை 31.39 சதவீதம் அதிகரித்தது.

சில்லரை விலை மற்றும் நுகர்வோர் விலை குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு மொத்த விலைக் குறியீடு கணக்கிடப்படு கிறது. அக்டோபர் மாதத்துக்கான நுகர்வோர் விலைக் குறியீடு ஓர் ஆண்டில் இல்லாத வகையில் 3.31 சதவீதமாகக் குறைந்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் மொத்த விலை அதிகரிப்புக்குக் காரணம் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் ரூபாய் மதிப்பு சரிவுதான் காரணம் என்று சந்தை நோக்கர்கள் கூறியுள்ளனர். மேலும் தற்போது கச்சா எண்ணெய் விலைச் சரியத் தொடங்கியுள்ளதுடன், ரூபாய் மதிப்பிலும் ஏற்றம் நிலவுகிறது. இதனால் இதை தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும். குறிப்பாக டிசம்பர் மாத நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் ரெபோ விகிதத்தில் எந்த மாற்றங்களையும் மேற்கொள்ளாது என்று குறிப்பிட்டனர்.

ரிசர்வ் வங்கியின் 5-வது நிதிக் கொள்கை கூட்டம் டிசம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது.

அக்டோபர் மாதத்தில் ரூபாய் மதிப்பு சரிவு அதிகமாக இருந்தது. மாத இறுதியில் சுமார் 1.43 சதவீதம் வரை சரிந்து டாலருக்கு நிகரான மதிப்பு 74.39 ரூபாய் வரை சென்றது. இந்த நிலையில் ரூபாய் மதிப்பு தற்போது ஏற்றத்தில் உள்ளதுடன் தினசரி வர்த்தகத்தில் ரூ.72.2 ஆக உள்ளது. கச்சா எண்ணெய் விலையும் ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் 76.25 டாலர் வரை அக்டோபர் மாதத்தில் இருந்தது. தற்போது 65 டாலராக குறைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x