Published : 26 Aug 2014 10:00 AM
Last Updated : 26 Aug 2014 10:00 AM

இந்தியாவின் ஜிடிபி 6 சதவீதம்: நொமுரா

நடப்பு நிதி ஆண்டின் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும் என்று நொமுரா நிறுவனம் கணித்திருக்கிறது. இதற்கு முன்பு நடப்பு நிதி ஆண்டின் வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. முதலீடு, ஏற்றுமதிக்கான தேவை அதிகரிப்பது, தனியார் நுகர்வு ஆகிய காரணங்களால் வளர்ச்சி அதிகரிக்கும் என்று இந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மேலும் 2016-ம் நிதி ஆண்டின் வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறது. இதற்கு முன்பு 6.5 சதவீத வளர்ச்சிதான் இருக்கும் என்று நிறுவனம் கணித்திருந்தது.

மேலும் ஜூன் காலாண்டின் வளர்ச்சி 5.9 இருக்கும் என்று தெரிவித்திருக்கிறது. இதற்கு முன்பு 4.7 சதவீதம் இருக்கும் என்று கூறியிருந்தது. திட்டங்களை செயல்படுத்துவதில் இருக்கும் பிரச்சினைகளை இந்த அரசு களைந்து வருகிறது. இந்த வளர்ச்சி தொடரும் என்று நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. வளர்ச்சி 2014-ம் ஆண்டில் தொடங்கி இருக்கிறது என்று தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x