Published : 23 Jun 2018 08:26 AM
Last Updated : 23 Jun 2018 08:26 AM

இவரை தெரியுமா?: அலெக்ஸி மில்லர்

கேஸ்ப்ரோம் இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2001-ம் ஆண்டு முதல் இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

லெனின்கிராட் சிட்டி கவுன்சில் அமைப்பின் திட்டமிடல் பிரிவு பொறியாளராக தனது பணி வாழ்க்கையைத் தொடங்கியவர்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் துறைமுக மேம்பாடு மற்றும் முதலீட்டு அமைப்பின் இயக்குநராக இருந்துள்ளார்.

ரஷ்யாவின் எண்ணெய் போக்குவரத்து அமைப்பான பால்டிக் பைப்லைன் திட்டத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

ரஷ்ய நாடாளுமன்றத்தில் மின்துறை துணை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

போர்ப்ஸ் பத்திரிகையால் உலகின் வலிமைவாய்ந்த மனிதர்களில் ஒருவராக குறிப்பிடப்பட்டவர்.

லெனின்கிராட் இன்ஸ்டிடியூட் ஆஃப் பைனான்ஸ் அண்ட் எக்கனாமிக்ஸ் நிறுவனத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x