Published : 17 May 2018 08:05 AM
Last Updated : 17 May 2018 08:05 AM

இவரை தெரியுமா?: விமல் கேஜ்ரிவால்

உள்கட்டமைப்பு துறை சர்வதேச நிறுவனமான கேஇசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2015-ம் ஆண்டிலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார்.

2002-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தில் இணைந்தார். இதற்கு முன் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருந்தார்.

மின் விநியோக பிரிவின் தலைவராக பொறுப்பு வகித்தவர். இவரது தலைமையில் 19 நாடுகளுக்கு தொழிலை விரிவுபடுத்தினார்.

பார்மா, உரம், எண்ணெய் எரிவாயு, முதலீட்டு வங்கி மற்றும் மின்சார கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் 33 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.

லசார்ட் இந்தியா, ஆதித்யா பிர்லா, பார்க் டேவிஸ் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

எஸ்ஸார் ஆயில் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக இருந்தவர்.

இந்திய பட்டயக் கணக்காளர், நிறுவன செயலாளர் பட்டம் பெற்றவர்.

நர்சி மோன்ஜி மேலாண்மை கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றவர். கெல்லாக் நிர்வாகவியல் கல்லூரியில் மேலாண்மையியலில் உயர்கல்வி முடித்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x