Published : 25 Apr 2024 05:26 AM
Last Updated : 25 Apr 2024 05:26 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரித்து நேற்று ரூ.53,840-க்குவிற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது.

இதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.6,730-க்கும், பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.53,840-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.57,600-க்கு விற்பனையானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x