Published : 31 Mar 2024 04:06 AM
Last Updated : 31 Mar 2024 04:06 AM

பள்ளிகொண்டா, வாணியம்பாடியில் ஏப். 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

பிரதிநிதித்துவப் படம்

வேலூர்: பள்ளிகொண்டா மற்றும் வாணியம்பாடி சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கான கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் ஏப். 1-ம் தேதி முதல் கட்டண உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 30 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருவதால் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உட்பட்ட திருவண்ணாமலை, கண்ணமங்கலம் சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு ஏப். 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பள்ளிகொண்டா சுங்கச் சாவடியில் கார்கள் ஒருமுறை செல்ல ரூ.110, சென்று வருவதற்கு ரூ.165, மாதம் ரூ.3,685 ஆக அறிவிக்கப் பட்டுள்ளது. இலகுரக வாகனங்கள், மினி பேருந்துகளுக்கு ஒருமுறை செல்ல ரூ.180, சென்று வருவதற்கு ரூ.270, மாதம் ரூ.5,950. பேருந்து மற்றும் லாரிகளுக்கு ஒருமுறை செல்ல ரூ.375, சென்று வருவதற்கு ரூ.560, மாதம் ரூ.12,470. கனரக வாகனங்கள் ஒருமுறை செல்ல ரூ.585, சென்று வருவதற்கு ரூ.880, மாதம் ரூ.19,550. அதிக நீளம் கொண்ட வாகனங்கள் ஒருமுறை செல்வதற்கு ரூ.715, சென்று வருவதற்கு ரூ.1,070, மாதம் ரூ.23,800 -ஆக உயர்கிறது.

அதேபோல், வாணியம்பாடி சுங்கச்சாவடியில் கார்கள் ஒரு முறை செல்வதற்கு ரூ.105, சென்று வருவதற்கு ரூ.160, மாதம் ரூ.3,570 ஆக உயர்ந்துள்ளது. இலகுரக வாகனங்கள், மினி பேருந்துகள் ஒருமுறை செல்ல ரூ.175, சென்று வருவதற்கு ரூ.260, மாதம் ரூ.5,765. பேருந்து, லாரிகள் ஒருமுறை செல்ல ரூ.360, சென்று வருவதற்கு ரூ.545, மாதம் ரூ.12,080. கனரக வாகனங்கள் ஒருமுறை செல்ல ரூ.570, சென்று வருவதற்கு ரூ.830, மாதம் ரூ.18,940. அதிக நீளம் கொண்ட வாகனங்கள் ஒருமுறை செல்ல ரூ.690, சென்று வருவதற்கு ரூ.1,040, மாதம் ரூ.23,060 ஆக உயர்கிறது.

இதுதொடர்பாக, வேலூர் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘‘ஒவ்வொரு ஆண்டும் ஏப். 1-ம் தேதியன்று கட்டண உயர்வு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு பக்கம் டீசல் விலை உயர்வு, மறுபக்கம் சுங்கச்சாவடி கட்டண உயர்வு போன்றவற்றால் பேருந்துகளை தொடர்ந்து இயக்க முடியாமல் நஷ்டமடைந்து வருகிறோம். தேசிய நெடுஞ்சாலை எனக்கூறி சுதந்திரமாக பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதற்கெல்லாம் மத்திய, மாநில அரசுகள் பேசாமல் மவுனம் காக்கின்றனர்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x