Published : 16 Feb 2024 05:54 AM
Last Updated : 16 Feb 2024 05:54 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்தது

சென்னை: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

கடந்த 12-ம் தேதி தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.46,640 - ஆகஇருந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக விலை குறைந்தது. இதன்படி, நேற்றும் பவுனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.45,920-க்கு விற்பனையானது.

கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,740-க்குவிற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.49,680-க்குவிற்கப்பட்டது. அதேநேரம், வெள்ளி கிராமுக்கு 50 பைசா அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.76-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.500 அதிகரித்து ரூ.76,000-க்கும் விற்பனையானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x