Last Updated : 01 Feb, 2018 02:58 PM

 

Published : 01 Feb 2018 02:58 PM
Last Updated : 01 Feb 2018 02:58 PM

பட்ஜெட் 2018-19: விலை கூடும், குறையும் பொருட்கள்

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்கவரி அதிகரிக்கப்பட்டுள்ளதால், மொபைல் போன், மோட்டார் சைக்கிள், பழரசங்கள், காலனிகள் உள்ளிட்ட பொருட்களின் விலை இனி அதிகரிக்கும்.

2018-19-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்தார்.

அதில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், வரும்நாட்களில் இந்த வகை பொருட்கள் விலை உயரும்.

அதேசமயம், வெளிநாடுகளில் இருந்து தோல் உரிக்காமல் இறக்குமதி செய்யப்படும் முந்திரி, சோலார் பேனலில் பயன்படுத்தப்படும் ஒருவகை கண்ணாடி, காதுகேளாதோருக்கான இயந்திரங்களுக்கான பொருட்களின் வரி குறைக்கப்பட்டுள்ளன.

விலை உயரும் இறக்குமதி பொருட்கள்

1. இறக்குமதி கார் மற்றும் மோட்டார் சைக்கிள்

2. மொபைல் போன்கள்

3. வெள்ளி, தங்கம்

4. காய்கறிகள், பழரசங்கள், குறிப்பாக ஆரஞ்சு, கிரான்பெரி

5. சன்கிளாஸ் (மூக்குக் கண்ணாடி)

6. சோயா புரோட்டீன் தவிர்த்த சமையலுக்கு பயன்படுக்கும் பொருட்கள்

7. பெர்பியூம் (வாசனை திரவியம்), கழிவறை பொருட்கள்

8. சன்ஸ்கீரன், சன் டேன், மணிகியூர், பெடிகியூர் லோஷன்கள்

9. பற்பசை, பல்மருத்துவத்தில் பயன்படும் பேஸ்ட், பவுடர்கள்

10. முகச்சவரம் செய்ய பயன்படும் பொருட்களுக்கான மூலப்பொருட்கள்.

11. டியோடரன்ட்டுகள்

12. பஸ், டிரக்கில் பயன்படும் ரேடியல் டயர்கள்

13. பட்டுத் துணி

14. காலணிகள்

15. ஸ்மார்ட் வாட்ச்

16. எல்சிடி, எல்இடி, டிவி பேனல்கள்

17. நாற்காலி, மேசைகள்

18. மெத்தைகள்

19. விளக்கு

20. கைக்கடிகாரம், பாக்கெட் கடிகாரம், கடிகாரம்

21. பொம்மைகள், குழந்தைகள் விளையாடும் சிறு பொம்மைகள்.

22. வீடியோ கேம் பொருட்கள்

23. உள்ளரங்கு, மைதான விளையாட்டுகளில் பயன்படுத்தும் உபகரணங்கள்.

24. சிகரெட், லைட்டர்கள், மெழுகுவர்த்தி

25. பட்டம்

26. சமையல் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கடலை எண்ணெய்

விலை குறையும் இறக்குமதி பொருட்கள்

1. கச்சா முந்திரி

2. சோலார் பேனல் அமைக்க பயன்படும் ஒருவகை கண்ணாடி

3. காதுகேளாதார் பயன்படுத்தும் இயந்திரங்களுக்கான பொருட்கள்.

4. மின்னணு பொருட்களுக்கு பயன்படும் சிறிய திருகு உள்ளிட்ட பொருட்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x