Published : 28 Aug 2023 10:19 PM
Last Updated : 28 Aug 2023 10:19 PM

விளாச்சேரி கைவினைக் கலைஞர்கள் கைவண்ணம்: வெளிமாநிலங்களுக்கு செல்லும் கண்ணைக் கவரும் கிருஷ்ணன் சிலைகள்!

மதுரை விளாச்சேரியில் கிருஷ்ணன் ஜெயந்தியை முன்னிட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பத்தயாராகும் கிருஷ்ணன் சிலைகளுக்கு வர்ணம் பூசும் கைவினைக்கலைஞர்கள்.

மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு விளாச்சேரியில் தயாரான கண்ணைக்கவரும் கிருஷ்ணன் சிலைகள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. கடந்தாண்டைவிட விறுவிறுப்பாக விற்பனையாவதால் கைவினைக்கலைஞர் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில் மண்பாண்டப் பொருட்களுக்கு புகழ் பெற்றது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட கைவினைஞர் குடும்பங்கள் உள்ளன. இங்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த களிமண்ணில் மண்பாண்டப் பொருட்கள் உற்பத்தி செய்து வருகின்றனர். கஞ்சிக்கலயம் முதல் கலைநயமிக்க சுவாமி சிலைகள் தரை கைகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன. பருவத்திற்கேற்றவாறு சுவாமி சிலைகள் உற்பத்தி செய்துவருகின்றனர். தற்போது செப்.6ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதால் அதற்கேற்ற சுவாமி சிலைகள் உற்பத்தி செய்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். இதனால் அப்பகுதி கைவினைக்கலைஞர்கள் அப்பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

கடந்தாண்டை விட கிருஷ்ணன் சிலைகள் விறுவிறுப்பாக விற்பனையாவதால் கைவினைக்கலைஞர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதுகுறித்து கைவினைக்கலைஞர் ரா.ஹரிகிருஷ்ணன் கூறியதாவது: செப்.6-ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதற்காக கிருஷ்ண சிலைகள் தயாரிக்கும் பணி ஜனவரி மாதத்தில் தொடங்கிவிட்டோம்.

குறைந்தது 6 இஞ்ச் முதல் 5 அடி உயரம் வரை சிலைகள் ???உள்ளன. இதில் 6 இஞ்ச் முதல் 12 இஞ்ச் வரை களிமண்ணிலும், 2 அடியிலிருந்து 5 அடி உயரம் வரை காகிதக்கூழிலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு தயாரித்துள்ளோம்.

சின்னஞ்சிறிய சிலைகள் தயாரித்து நிழலில் 3 நாள் காயவைத்து, ஒருநாள் சூளையில் வைத்து சுட்டு, 2 நாள் வர்ணம் பூசி முழுவடிவத்திற்கு கொண்டு வர 1 வாரம் ஆகிவிடும். இதில் பலரது உழைப்பு உள்ளது. சின்னஞ்சிறிய சிலைகள் ரூ.50லிருந்து ரூ.70 வரைக்கு விற்பனையாகும். பெரிய சிலைகள் ரூ.6 ஆயிரத்திலிருந்து 7 ஆயிரம் வரை விற்பனையாகும். தமிழகத்தை தவிர்த்து கேரளம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும், மற்றும் வடமாநிலங்களுக்கும் கடந்தாண்டைவிட கூடுதலாக வியாபாரிகளுக்கு அனுப்பிவருகிறோம். பொம்மை சிலைகளில் தவழும் கிருஷ்ணன், உட்கார்ந்துள்ள கிருஷ்ணன், வெண்ணெய்யுடன் கிருஷ்ணன், நிற்கும் கிருஷ்ணன், ராதையுடன் கிருஷ்ணன் என 10 வகையில் கிருஷ்ணன் சிலை தயாரித்துள்ளோம். கடந்தாண்டைவிட விற்பனை அதிகரித்துள்ளதால் மகிழ்ச்சியாக உள்ளது, என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x