Published : 23 Oct 2023 12:48 PM
Last Updated : 23 Oct 2023 12:48 PM

GroupM வழங்கும் ‘இந்து தமிழ் திசை’யின் வணிக வீதி  தொழில்முனைவோருக்கான களம் வழிகாட்டி நிகழ்வு

மதுரை:

GroupM வழங்கும் ‘இந்து தமிழ் திசை’யின் வணிக வீதி தொழில்முனைவோருக்கான களம் வழிகாட்டி நிகழ்வு, புதிதாக தொழில் தொடங்கி நடத்துபவர்களுக்கும், தொழில் தொடங்கிட யோசிப்பவர்களுக்கும் வழிகாட்டும் வகையில் வரும் 2023 அக்டோபர் 28 (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் ரோட்டிலுள்ள sterling v grand hotel அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் FaMe TN மற்றும் Tamilpreneur உடன் இணைந்துள்ளன.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் தொழில் வளர்ச்சியை பொறுத்தே மதிப்பிடப்படுகிறது. இந்தியா தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது. தமிழ்நாடும் தொழில்துறையில் முன்னேறிய மாநிலமாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டில் இன்றைக்கு புதிய தொழில்முனைவோர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதிய தொழில் தொடங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள், தாங்கள் நடத்திவரும் தொழிலை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்ல விரும்புபவர்கள், நவீன முறையில் சந்தைப்படுத்திட மற்றும் ஸ்டார்ட் - அப் நிறுவனத்திற்கு நிதி திரட்டுவது எப்படி என யோசிப்பவர்களுக்கும் வழிகாட்டும் நோக்கில் தொழில்துறையில் சாதித்த முன்னோடிகள், இந்திய அளவில் கவனம் ஈர்க்கும் ஸ்டார்ட்-அப் தொழில்முனைவோர்கள், ஏஞ்சல் இன்வெஸ்டர்கள், மார்க்கெட்டிங் துறை நிபுணர்கள் தங்களது தனித்துவமிக்க அனுபவங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள். தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘வணிக நாயகர்’ என்று பாராட்டி, கவுரவிக்க உள்ளோம்.
இந்நிகழ்வை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் மேனாள் தலைவர் எஸ். இரத்தினவேல் தொடங்கி வைக்கிறார். கோவை லெட்சுமி செராமிக்ஸ் நிர்வாக இயக்குநர் எஸ்.முத்துராமன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றவுள்ளார். பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘group m’ சர்வதேச அளவில் மிக முக்கியமான மார்க்கெட்டிங் மற்றும் ஊடக முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். இதன் இந்தியப் பிரிவான ‘group m இந்தியா’ நிறுவனமானது, இந்திய வாடிக்கையாளர்களுக்கு தரவு பகுப்பாய்வு உட்பட நவீன தொழில்நுட்பக் கட்டமைப்பு வழியாக மார்க்கெட்டிங் சேவை வழங்கி வருகிறது. Wave maker, Essence Media Com, Mindshare, mSix & Partners, Motivator ஆகிய ஐந்து அமைப்புகள் ‘group m’ நிறுவனத்தின் அங்கமாக உள்ளன.

இதில், பங்கேற்க விரும்புபவர்கள் அவசியம் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த லிங்கில் https://www.htamil.org/VVMADURAI அல்லது இத்துடன் உள்ள QR Code-ஐ ஸ்கேன்செய்து, ரூ.199/- (ஜிஎஸ்டி உட்பட) பதிவுக்கட்டணமாகச் செலுத்தி, இந்நிகழ்வில் பங்கேற்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x