Last Updated : 16 Dec, 2016 10:57 AM

Published : 16 Dec 2016 10:57 AM
Last Updated : 16 Dec 2016 10:57 AM

மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 19: பழவேற்காட்டை மறக்காத டச்சுகள்!

புதுடெல்லியில் உள்ள நெதர்லாந்து நாட்டின் கலாச்சாரத்துறை அதிகாரி டாக்டர் ராபர்ட் ஆர்ஸ் மெட்றாஸ் மாநகருக்கு 2001-ல் வந்தபோது பழவேற்காடு நகரைக் குறித்து சில பசுமை யான நினைவுகளையும் அதைப் பாரம் பரியக் கலைச் சின்னமாகப் பாதுகாக்க விரும்பும் ஆர்வத்தையும் வெளிப்படுத் தினார். இந்தியாவில் டச்சுக்காரர்கள் (ஹாலந்து, நெதர்லாந்து என்றும் அழைக் கப்படும் நாடு) முதன்முதலில் காலூன்றி யதும் பிரதான குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொண்டதும் மெட்றாஸ் நகருக்கு வடக்கில் இருந்த பழவேற் காட்டில்தான்.

பழவேற்காடு என்ற இந்த ஊர் ஆங்கி லேயர்களால் ‘புலிக்காட்’ என்று அழைக் கப்பட்டது. பழவேற்காட்டைப் சுற்றுச் சூழல் சிறப்பு மிக்க சுற்றுலாத் தலமாக வும் கலாச்சாரச் சின்னமாகவும் தங்கள் செலவில் வளர்ச்சி பெற வைக்க விரும்பு வதாக ராபர்ட் ஆர்ஸ் விருப்பம் தெரிவித் தார். கலை, கலாச்சாரப் பாரம்பரியத் துக்கான தேசிய அறக்கட்டளையின் தமிழகக் கிளை மேற்கொண்ட முதல் கட்ட ஆய்வு இதில் டச்சுக்காரர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. டச்சு நாட் டைச் சேர்ந்த சில அறிஞர்களும் கட்டிடக் கலை வல்லுநர்களும் பழவேற்காட்டைப் பார்வையிட்டபோது இந்த ஊரை சுற்றுலா மையமாக வளப்படுத்தினால் வெளிநாட்டவர்கள் வந்து பார்ப்பார்கள் என்று தெரிவித்தார்கள்.

கலை, கலாச்சாரத்துக்கான தேசிய அறக்கட்டளையின் முன்முயற்சி காரண மாக நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப் பினர்கள் 5 பேர் தங்களுடைய இந்தியப் பயணத்தின்போது பழவேற்காட்டுக்கு வந்தனர்.

பழவேற்காட்டைத் தங்களுடைய கலாச்சாரப் பண்பாட்டுத் தொடர்பு அங்க மாக மாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நெதர்லாந்து அரசு, பழமைச் சின்னங்களைப் பாது காக்க விரும்பும் ஆர்வலர்கள், அரசு சாராத பாரம்பரிய அமைப்புகள் ஆகியோ ருக்கு வேண்டுகோள் விடுத்தனர். பழ வேற்காட்டுக்கு உயிர் கொடுக்கவும் அதன் பாரம்பரியக் கலாச்சாரச் சின்னங் களை அழகுபடுத்திப் பாதுகாக்கவும் உரிய திட்டங்களைத் தீட்டவும் நிதி உதவிக்கும் தங்களுடைய நாடு உறு துணையாக இருக்கும் என்று அறிவித் தனர். இதில், பழவேற்காடு நகர மக்களுக் கும் அரசுக்கும் உள்ள ஆர்வத்தை யொட்டி இந்தத் திட்டம் செயல் படுத்தப்படும் என்றனர்.

மெட்றாஸ் என்ற நகரம் உருவாவ தற்கு 30 ஆண்டுகளுக்கு முன்னதாக கி.பி. 1609-ல் ‘புலிக்காட்’ என்று தாங்கள் அழைத்த நகரின் மீது டச்சுக்காரர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. இந்திய நிலப் பகுதி யில் தாங்கள் குடியேறிய அந்த இடத்தில் ஜெல்டிரியா என்ற முதல் கோட்டையை டச்சுக்காரர்கள் எழுப்பினர். டச்சுக்காரர் களும் வாணிபத்துக்காக ஒரு கிழக்கிந் தியக் கம்பெனியை நிர்வகித்தனர். அந்தக் கோட்டைக்கு சரியாக 40 கி.மீ. தெற்கில்தான் மெட்றாஸ் இருக் கிறது.

காய்கறிகளில் இருந்து எடுத்த சாயங் களைக் கொண்டு பழவேற்காட்டில் துணிகளுக்குச் சாயமேற்றப்பட்டன. அந்த இடத்தின் பெயராலேயே அவை ‘பளைய காட்’லுங்கிகள் என்று உலக அளவில் புகழ்பெற்றன. அந்த லுங்கிகளால் கவரப்பட்டுத்தான் டச்சுக்காரர்கள் இந்தியாவின் சோழ மண்டலக் கடற்கரையில் (கோர மண்டல்) குடியேறினர்.

டச்சுக்காரர்களின் முக்கியக் குடியிருப் பாக பழவேற்காடு 1781 வரையில் திகழ்ந்தது. 1781-ல் அந்த இடத்தைப் பிரிட்டிஷ்காரர்கள் கைப்பற்றினர். பிறகு 1785-ல் டச்சுக்காரர்களிடமே திருப்பித் தந்தனர். மீண்டும் 1795-ல் தங்கள் வசமே எடுத்துக் கொண்டனர். மீண்டும் 1818-ல் டச்சுக்காரர்களிடமே திருப்பித் தந்தனர். பிறகு இறுதியாக 1825-ல் மீண்டும் கைப்பற்றிக்கொண்டனர். அப் போது கீழ்த்திசை நாடுகள் மீது டச்சுக் காரர்களின் ஆர்வம் உறுதியடைந்தது. மெட்றாஸ் நகரம் வளர்ந்து புகழ்பெறத் தொடங்கியதால் பிரிட்டிஷ்காரர்களுக்கு ‘புலிக்காட்’ மீது ஆர்வம் குறைந்தது. அதன் பிறகு ‘புலிக்காட்’ மீது பிரிட்டி ஷார் அதிகக் கவனம் செலுத்தவில்லை. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் அரசுகளுக்கு அதிலும் குறிப்பாகத் தமிழக அரசுக்கு, பழவேற்காட்டின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை ஏற்படவில்லை.

இப்போது ஜெல்டிரியா கோட்டையின் எச்சம் என்று அதன் அகழி மட்டும்தான் இருக்கிறது. சுவர்கள், கோட்டையின் கல்லறை போன்றவை இந்தியத் தொல்லி யல் துறையின் பராமரிப்பில் இருக்கிறது. பழைய டச்சு கல்லறை, இரு சோழர் காலக் கோயில்கள், 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த மசூதி, ஆங்கிலோ-டச்சு வம்சாவழியினரின் இரண்டு தேவால யங்கள் ஆகியவை அந்தக் காலத்தில் இருந்ததைப் போலவே இன்னமும் மாறா மல் இருப்பது இந்த இடத்தின் சிறப்பு. சில வீதிகளில் உள்ள வீடுகளும் கடை வீதியும் 19-வது நூற்றாண்டின் வளர்ச் சியை உள்வாங்கியுள்ளன.

இந்த ஊரை ‘மாதிரி கலாச்சார நகரமாக’ மாற்றவும், பழைய வீடுகளில் சிலவற்றில் விருந்தினர்களைத் தங்க வைக்கும் வகையில் சில நவீன வசதிகளைச் செய்யவும் இது நல்ல வாய்ப்பு என்று பழமையைப் பாது காக்க விரும்பும் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

ஒரு காலத்தில் இந்த ஊருக்குப் பெருமைச் சேர்த்த துணி உற்பத்தியும் கூடை முடைதலும், மீன்பிடித் தொழிலும் இப்போது உச்சத்தில் இல்லை. இந்த நகரைப் பாரம்பரிய நகரமாக மாற்றும்போது அவற்றுக்கு மீண்டும் அந்தப் பெருமைகள் கிடைக்கக்கூடும். மீனவர்கள் மீன்பிடித்தலுடன் மாற்று வேலைவாய்ப்பையும் தேடிக்கொள்ள வாய்ப்பாக இருக்கும். பழவேற்காடு ஏரிப் பகுதியில் ஏராளமான பறவைகள் வாழ்கின்றன.

அக்டோபர் முதல் ஏப்ரல் வரையில் இங்கு நாரைகள் கூட்டம் கூட்டமாக வாழும். பறவைகளும் உயிரிச் சூழலும் அற்புதமான கலவையாகத் திகழ்கின்றன. பழவேற்காடு ஏரி யைச் சுற்றிலும் இயற்கையாக அமைந்த மணல் மேடுகள் சுற்றுலாப் பயணிகளை நிச்சயம் ஈர்க்கும். ஏரியில் மீன் வளத்தைப் பெருக்குவதுடன் நீர் விளையாட்டுகளுக்கும் பயன் படுத்தலாம். இவற்றில் மீனவர்கள் முக்கியப் பங்கு வகிக்க முடியும்.

பழவேற்காட்டை மிகப்பெரிய சுற்று லாத் தலமாகவும் பாரம்பரிய நகரமாக வும் உருவாக்குவதன் மூலம் முழு இந்தியாவுக்கும் தமிழகம் நல்ல வழி காட்டியாகத் திகழ முடியும். டச்சுக்காரர்கள் உதவத் தயாராக இருக்கிறார்கள், உள்ளூர் மக்களும், தமிழக அரசும் இதைப் பரிசீலிக்க வேண்டும்.

- சரித்திரம் பேசும்…

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x