Published : 13 May 2016 08:40 AM
Last Updated : 13 May 2016 08:40 AM

காப்பிராயன் கவிதை

நாங்கதான்
ஜெயிப்போம்னு
எல்லாக் கட்சியும் சொல்லுது
வெத்தல பாக்கு இல்லாமலே
வெறும் வாய மெல்லுது!

எதிர்காலம் மக்கள் கையில்
யாருக்கிப்போ தெரியுண்டா
ஓட்டை எண்ணி சொன்னாத்தான்
உண்மை நிலைமை புரியுண்டா!

அதுக்குள்ள சில பேரு
பெட்டிங் இங்கே நடத்துறான்
கிரிக்கெட்டு சூதாட்டத்த
அரசியலில் நொழைக்கிறான்!

எந்தக் கட்சி ஜெயிக்கும்னு
பணத்த அள்ளிக் கொட்டுறான்
கட்டிப்புட்டு ஜெயிக்கலாம்னு
காத்துலதான் பறக்குறான்!

பெட்டிங் எல்லாம் உனக்கெதுக்கு
உழைப்பை மட்டும் நம்புடா
தோத்தா உனக்குப் பட்டை நாமம்
வேணாம் இந்த வம்புடா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x