Published : 04 Apr 2016 03:16 PM
Last Updated : 04 Apr 2016 03:16 PM

நெட்டிசன் நோட்ஸ்: காங்கிரஸும் 41 நோபால்களும்!

திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி என பேசப்பட்டு வந்த நிலையில், இரண்டாவது முறையாக இன்று (திங்கள்கிழமை) சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, இந்தத் தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சி நிலை குறித்து சமூக வலைதளவாசிகளின் பார்வை இதோ...

>Kanda:

'எட்டணா பிச்சை போடுங்க' என்றவனுக்கு, 'சில்லரை இல்லப்பா, 5 ரூபாயா வச்சிக்கோ!' என்றார் அந்த ஏழை விவசாயி. கலைஞர் டூ காங்கிரஸ்.

>Shahirabanu Rajamhmd: ‏

தமிழ் மாநில காங்கிரஸ் இல்லாமல், அளவுக்கு அதிகமான தொகுதிப்பங்கீடு தேவையில்லாத ஒன்று. யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டது போலுள்ளது.

>ஆல்தோட்டபூபதி:

அதிமுக வேட்பாளர்கள் Vs காங்கிரஸ் வேட்பாளர்கள் #இன்று

>மருந்தாளுநன்:

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு

இருக்கிற 40 கோஷ்டிக்கும் ஆளுக்கொண்ணா பிரிச்சாக்கூட இன்னும் ஒண்ணு மிச்சமாகுதே?

>SANKAR ANANTH:

கலைஞர்: காங்கிரஸ்க்கு 41 தொகுதிகள்.

ஸ்டாலின்: அத எதுக்கு காங்கிரஸ்க்கு குடுத்துகிட்டு? நேரா அதிமுகவுக்கே குடுத்துற வேண்டியதான?

*

காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கியது திமுக.

Simmonsக்கு கூட 2 நோபால் தானே?

நீங்க அதிமுகக்கு 41 நோபால் போட்டிங்களேப்பா? :(

>தஞ்சை தர்மா:

காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள்.

#தட் ஐயோ நான் என்ன பண்ணுவேன்? இந்த நேரம் பாத்து வேட்பாளர்கள் இல்லையே மொமண்ட்

>Prabhakaran Balakrishnan:

‪திமுக‬ கூட்டணியில் ‪காங்கிரஸ்‬-க்கு 41 தொகுதிகள். கொஞ்சம் அதிகம் தான் என்றாலும் திமுகவுக்கும் வேறு வழியில்லை.

>பரமேஸ்வரன்:

இப்படி வெறும் 41 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டால், எப்படி ஆட்சி அமைப்பீர்கள் காங்கிரஸ் பேரியக்கத்தவர்களே? :/ #ஆண்டகட்சி

>டிஜிட்டல் சேகர்:

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு!

தலைமையின் முடிவை தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி நமதே !

>யுகராஜேஸ்: ‏

ஒற்றுமையா சண்டைப்போட்டு திமுகவிடம் வாங்கிய 41 சீட்டுகளை, இனி தனித்தனியா சண்டைப்போட்டு பிரிச்சுக்குவாங்க #காங்கிரஸ் தொகுதி பங்கீடுகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x