பளிச் பத்து 117: செவ்வாய் கிரகம்

பளிச் பத்து 117: செவ்வாய் கிரகம்
Updated on
1 min read

செவ்வாய் கிரகத்தை கலிலியோ கலிலீ கண்டுபிடித்தார்.

சூரியனுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையேயான தூரம் 227.9 மில்லியன் கிலோமீட்டர்.

செவ்வாய் கிரகம் 6.779 கிலோமீட்டர் விட்டத்தைக் கொண்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தை அடைவதற்கு 51 முறை முயற்சிகள் நடைபெற்றன. இதில் 21 முயற்சிகள் மட்டுமே வெற்றி பெற்றன.

செவ்வாய் கிரகத்தை சென்றடையும் முயற்சியில் அமெரிக்கா 1964-ம் ஆண்டில் முதல் முறையாக வெற்றி பெற்றது.

ஒலிம்பஸ் மோன்ஸ் என்ற உயரமான மலை செவ்வாய் கிரகத்தில் உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது 687 நாட்கள்.

பூமியை விட செவ்வாய் கிரகம் குளிர்ச்சியாக இருக்கும்.

போப்ஸ், டீமோஸ் என்ற 2 நிலவுகள் செவ்வாய் கிரகத்தில் உள்ளன.

பூமியில் இருப்பதைவிட செவ்வாய் கிரகத்தில் 37 சதவீதம் புவியீர்ப்பு சக்தி குறைவாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in