Last Updated : 29 Oct, 2015 10:51 AM

 

Published : 29 Oct 2015 10:51 AM
Last Updated : 29 Oct 2015 10:51 AM

ஒரு நிமிடக் கதை: வட்டி

திண்ணையில் இருந்த கணவர் கனகவேலுக்கு காபி எடுத்து வந்த மீனாட்சி, “அடுத்த மாசம் வட்டி கட்டலைன்னா கறவை மாட்டை ஓட்டிட்டு போயி டுவேன். புரியுதா?” என்று கர்ஜித்த கனகவேலின் குரல் கேட்டு நின்றாள்.

பத்து வருடங்களாக கனகவேல் வட்டிக்கு பணம் கொடுத்து வருபவர். ஊரில் நில புலன்கள் இருக்கும் மிராசுதாரர். இருப் பினும் பணத்தாசையில், மக்களுக்கு கடன் கொடுத்து அதிக வட்டியை கறந்து விடுவார்.

“பாவம்ங்க அவங்க. வட்டி போடாம கடனா கொடுங் களேன்” என்பாள் மீனாட்சி.

“அடியே, வட்டி போட்டால் தாண்டி அவங்களுக்கு கொஞ் சம் கொஞ்சமா பணத்தை திருப்பி கட்டி, சீக்கிரமே கடனை அடைக்க தோணும்” என்பார்.

“என்னமோ போங்க.. அவங்க வயித்தெரிச்சல் நம்மளை சும்மா விடாது” என்பாள் மீனாட்சி .

அன்று பட்டணத்துக்கு சென்ற கனகவேல் சோர்வாக திரும்பிவந்தார்.

“ஏங்க, சோர்வா இருக் கீங்க?” என்றாள்.

“டவுன்ல என் தம்பிய பாத்துட்டு வரலாம்னு போயி ருந்தேன். கொஞ்ச நாளாவே அவனுக்கு உடம்பு சரி யில்லையாம். சோதிச்சு பாத்தா ரத்தத்துல புற்று நோயாம்” என்றார் தளர் வுடன்.

“அடப்பாவமே, ஒண்ணும் பிரச்சினை இல்லையே?” என்றாள் மீனாட்சி.

“சிகிச்சை எடுக்குறான். அது வந்தா என்னமோ ரத்தத்த கொஞ்சம் கொஞ்சமா அரிச்சிடும்னு சொல்றாங்க.. அவனுக்கு ஏன்தான் இந்த சோதனையோ? ஆண்டவன் இப்படி நோயை கொடுத்து நிம்மதியா வாழ விட மாட்டான் போல” என்றார்.

சற்று நேர அமைதிக்குப் பின் “அது மாதிரிதாங்க நீங்களும் பண்றீங்க” என் றாள் மீனாட்சி .

குழப்பத்துடன் பார்த்த கனகவேலிடம், “நீங்க வட்டிய திருப்பி கேட்டு மிரட்டுறப்போ எல்லாம், அந்த அப்பாவி ஜனங்க மனசுல பயம் புத்து மாதிரி அரிச்சுகிட்டே இருந்து, பயந்து பயந்து பொழப்பு நடத்துவாங்க. உங்களால அவங்க நிம் மதி கெட்டுக்கிட்டேதான் இருக்கும். வட்டி பணத்தோட பாவமும்தாங்க வட்டியா நமக்கு கிடக்கும். இப்ப புரியுதாங்க நீங்க செய் யற செயலைப் பத்தி?” என்றாள்.

கனகவேல் தன் மனதுக் குள் இந்த வட்டி தொழிலை விட்டுவிடவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x