Published : 13 Jul 2016 04:19 PM
Last Updated : 13 Jul 2016 04:19 PM

யூடியூப் பகிர்வு: சேதமில்லாமல் தேன் எடுக்க இயற்கை வழி!

பெங்களூரு இந்திய அறிவியல் கழக ஆராய்ச்சியாளர் பொன்னண்ணா பாதுகாப்பான முறையில் கூடுகளில் இருந்து தேனெடுக்கும் வழிமுறையைக் கையாள்கிறார். எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் அவருக்கு தேவைப்படவில்லை. ஒரு துணியில் தீயைக் கொளுத்தி புகையை ஏற்படுத்துகிறார்.

பல்வேறு விதமான இலைகளைக் கொண்டு தயாரான மூலிகைக் கலவையால் ஆகியிருக்கிறது அந்தத் துணி. வெளிவரும் புகையை ஒரு கருவியைக்கொண்டு கூட்டின் மேல் படுமாறு பாய்ச்சுகிறார். அதன் மூலம், கூட்டில் இருந்து தேனீக்களை விரட்ட முற்படுகிறார்.

தேனீக்களும் மெல்ல மெல்ல கூட்டை விட்டு விலக ஆரம்பிக்கின்றன. வெற்றுக் கைகளாலேயே கூட்டை நெருங்குகிறார். பின்னர் கூடு எடுக்கப்பட்டு தேன் பிழியப்படுகிறது. அந்த இடத்தில் ஒரு பசையைத் தடவுபவர், அந்த இடத்தில் புதிய கூடு உருவாவதைத் தடுக்கிறார். இவை அனைத்துக்கும் அதிகபட்சம் பத்து நிமிடங்களே ஆகின்றன.

இந்த முறை பாரம்பரிய தேன் எடுக்கும் முறையைக் காட்டிலும் நவீனமானது. இம்முறையில் சுமார் 20 சதவீதத்துக்கும் குறைவான தேனீக்களே இறக்கின்றன என்றும் பொன்னண்ணா கூறுகிறார்.

தேன் எடுக்கும் காணொளியைக் காண