Published : 09 Jul 2016 10:51 AM
Last Updated : 09 Jul 2016 10:51 AM

அதிசய உணவுகள் 2 - தவளை சூப்!

‘உலகத்தில் உண்மையான காதல் என்பது வேறு எதிலுமே இல்லை. அது

உண்ணும் உணவின் மீதுதான் இருக்கிறது!’ - ஜார்ஜ் பெர்னாட் ஷா

இரண்டாயிரத்தில் இருந்து பத் தாயிரம் வரையிலான சுவை மொட்டுகளை (Taste Buds) தன்ன கத்தே கொண்ட ஒரு மனிதனுடைய நாக் கின் நீளம் வெறும் 4 அங்குலங்கள் தான். இந்தச் சிறிய நாக்குக்காக படைக் கப்பட்டிருக்கிற பலவகையான உணவு வகைகளை எல்லாம் உலகெங்கிலும் வாழும் மனிதர்கள்கண்டுபிடித்து வைத் திருப்பது உலக மகா அதிசயமாக எனக்குத் தோன்றும். நாக்கின் சுவை என்பது இந்த நாலு அங்குலங்களைத் தாண்டினால் காணாமல் போய்விடும். இதற்குத்தான் மனிதன் இவ்வளவு மல்லாடுகிறான்!

தாய்வான் நாட்டின் தலைநகரம் டைபியில் இருந்த ‘ஷிலின்’ இரவு உணவுச் சந்தையில் ‘தவளை முட்டை சூப்’ விற்கும் கடையில் பச்சை நிறத்தில் ஐவ்வரிசியைப் போல் சின்னச் சின்ன உருண்டைகள் மிதந்த திரவத்தைப் பார்த்து திகைத்துப் போய் நின்றேன்.

‘தக்காளி சூப் தொடங்கி ஹாட் அண்ட் சவர் சிக்கன் சூப் வரையிலான பல சூப்புகளை நான் குடித்து மகிழ்ந் திருக்கிறேன். ஆனால், இந்த சூப்பைப் போல்...’ என்று நான் என் மனசுக் குள் நினைத்துக் கொண்டிருக்கும்போது ‘‘சாந்தி இரவு உணவுச் சந்தையில் சாப் பிடுகிறேன் என்றாயே, இந்த சூப்பை கொஞ்சம் ருசி பாரேன்…’’ என்று என் கணவர் கிண்டலாகக் கேட்டார். அந்த சூப் பில் மிதந்த சின்னச் சின்ன உருண்டைகள் எல்லாம் என் மனக் கண்முன்னால் பல தலைப்பிரட்டைகளைப் (Tadpole) போலத் தோன்றி வலம்வந்தன.

‘‘ஜயோ! எனக்கு வேண்டாம் சாமி…’’ என்று அவசரமாக மறுத்து அந்தக் கடையைவிட்டு நகர்ந்தேன். அதன் பிறகு எங்களுடைய வழிகாட்டி (கைடு)சொல்லித்தான் புரிந்துகொண்டோம், உண்மையில் அவை தவளைமுட்டைகள் அல்ல; துளசி விதைகளைக் (Basil seeds) கொண்டு செய்யப்பட்டசூப் என்று!

உணவுச் சந்தையின் உள்ளே செல் வது என்பது கொஞ்சம் நெருக்கடியானது.சாலையின் நடுவிலேயே மேஜைகளை யும் நாற்காலிகளையும் போட்டு,அதில் பொதுமக்கள் ஆனந்தமாக அமர்ந்தபடி என்னென்னமோ உண்டு மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். தாய்வானில் பன்றிக் கறி, கடல்சார்ந்த உணவுவகை கள், கோழி, அரிசிச் சோறு, சோயா போன்ற உணவு வகைகள் அதிகமாக புழக்கத்தில் உள்ளன. இங்குள்ளவர்கள் மாட்டு இறைச்சியை அவ்வளவாக விரும்பி சாப்பிடுவது இல்லை என்பது தெரியவந்தது. இந்தியாவில் வாழ்கிற இந்துக்களுக்கு பசுமாடு புனிதமாக இருப் பதைப் போலவே, பவுத்த மதத்தைச் சேர்ந்த தாய்வான் நாட்டு மக்களுக்கும் ஒருகாலத்தில் பசுமாடு புனிதமாக திகழ்ந் துள்ளது. ஆனால், 1900-களில் சீனநாட்டு டன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்ட பிறகு, இங்கே மாட்டு இறைச்சியை சாப்பிடு பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள் ளது. ‘ஷிலின்’ இரவு உணவுச் சந்தையில் மாட்டுஇறைச்சியால் தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ் சூப்பை சாப்பிடுவதற்கு மிகப் பெரிய வரிசையில் மக்கள் நின்றிருந்ததே இதற்குச் சான்று!

எங்கள் வழிகாட்டி சொல்லியிருந்தார்: ‘‘எங்கெல்லாம் பெரிய வரிசையையும் பொருட்படுத்தாமல் மக்கள் நிற்கின்ற னரோ… அங்கே விற்கப்படும் உணவு மிக சுவை நிறைந்ததாக, மக்கள் விரும்பி சாப்பிடுவதாக இருக்கும். அதனால் தவறாமல் அந்த வரிசையில் போய் சேர்ந்துகொள்ளுங்கள்!’’

ஆனால், எங்கெல்லாம் வரிசை நீண்டு இருந்ததோ அவையெல்லாம் எங் களுக்கு எட்டாக் கனிகளாக இருந்தன. உதாரணத்துக்கு காபோ (Gua Bao). ஆவியில் வேக வைத்த வெள்ளை பன்னின் நடுவில், பன்றியின் வயிற்றுப் பகுதியைத் துண்டுத் துண்டுகளாக வெட்டி, வேகவைத்து அதில் காய்கறி களால் ஆன ஊறுகாயைப் போட்டு, மசாலாவையும், வேர்கடலைத் தூளை யும் தூவி கலவையாகக் கொடுக்கப் படும் காபோவுக்கு தாய்லாந்து மக்களும், ஏற்கெனவே இதை ரசித்து சுவைத்த வெளிநாட்டு உல்லாசப் பயணிகளும் அடிமைகளாகி கால் கடுப்பதையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்றனர். பன்றிக் கறி என்றால் காத தூரம் ஓடும் நான் எப்படி இதை சுவைப்பது? மற்றவர் சுவைப்பதை மட்டும் பார்த்து ரசித்தேன்.

மீண்டும் சிறிது தூரம் நடந்தோம். எங்களுக்கு எதிரே வந்த பலர் கைகளில் ஐஸ்கிரீம் குச்சிகளைப் போல ஏதோ வைத்திருந்தனர். அது என்னவென்று உற்றுப் பார்த்தேன். அந்த குச்சிகளைச் சுற்றி ஏதோ ஒரு சாப்பிடும் பொருள் வளையங்கள் போல வளைந்து சென்று முனையில் சிலிப்பிவிடப்பட்ட மயிற் கற்றைகளைப் போல இருந்தது.

எனது ஆர்வத்தை கட்டுப்படுத்த முடி யாமல் அந்த ஐட்டத்தை விற்கும் கடை அருகில் சென்று எட்டிப் பார்த்தேன். (Squid) ஸ்குயிட் என்கிற சிப்பி வகை மீனை (Grill) தீயில் வாட்டி, அதை இனிப்பும், உப்பும் கலந்த சாஸில்போட்டு புரட்டியெடுத்து பிறகு குச்சிகளில் குத்தி விற்கிறார்கள்.

பசி என் வயிற்றைப் புரட்டிப்போட் டது. கண்கள் கண்ட காட்சிகள் எல்லாம் என் கணவர் சொன்னது போல, ஹோட் டலிலேயே இரவு உணவை முடித்திருக்க லாமோ என்ற எண்ணத்தைத் தோற்று வித்தது.

‘‘ஹாய்… சிவா!” என்று குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினோம். குரல்வந்த திசையில் எங்களுடைய வழிகாட்டி சிரித் துக்கொண்டு நின்றிருந்தார். ‘தாய்வான் குடிமகனான அவர் வயிறு முட்ட தின்றி ருப்பார். ம்… நம் வயிறு தான் காய்கிறது’ என்று எண்ணிக் கொண்டேன்.

‘‘என்னப்பா தப்பான இடத்துக்கு வந்து விட்டோமே…’’ என்று நினைக்கிறீங்களா? வாருங்கள் என்னோடு, உங்களுக்கு உகந்த ஜியோசியை (Xiaochi) வாங்கித் தருகிறேன்’’ என்றழைத்தார்.

‘அது என்ன ஜியோசி? கேட்டறியாத பெயராக இருக்கிறதே. இன்றைக்கு நமக்கு ஏகாதசி விரதம்தான்!’ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, ‘‘ஜியோசி என்றால் தாய்வானில் நொறுக்கு தீனிகள் என்று அர்த்தம். பெரிய சாப்பாடு சாப்பிடுவதற்கு முன் சின்னதாக கொரிப்போமே, அதுதான் ஜியோசி’’என்றார் எங்கள் வழிகாட்டி.

எங்களுக்கு யானைப் பசி. சரி, சோளப் பொரியாவது கிடைக்கட்டுமே என்று ஆவ லுடன் அவரைப் பின் தொடர்ந்தோம். அவர் அழைத்துச் சென்ற ஸ்டால்களில் விற்கப்பட்ட பல உணவுகள் என் நெஞ்சை படபடக்க வைத்தன. இன்று நினைத்தா லும் அவை மலைப்பை ஏற்படுத்து கின்றன!

முதலாவது நொறுக்குத் தீனி அதாவது ஜியோசி என்ன தெரியுமா?

வேக வைத்த கோழியின் கால்களை, சோயா சாஸில் முக்கி முக்கித் தருகிறார் கள். நகங்களுடன் கூடிய கோழியின் காலில் விரல்களைத் தவிர, அதில் கறி என்று ஒன்றுமே இல்லை. இரண்டாவது, வாத்தின் நாக்கை தீயில் வாட்டி சாஸ் தடவி குச்சியுடன் நீட்டுகிறார்கள்.

கோழியின் இதயத்தை மட்டும் எடுத்து பதப்படுத்தி, குச்சிகளில்வரிசையாக ஒன் றன்பின் ஒன்றாக அடுக்கி விற்கிறார்கள்.

பிறகு, வாத்தின் ரத்தம் அல்லது பன்றியின் ரத்தத்துடன் ரைஸ், சோயா சாஸ் கலந்து வேக வைத்து அல்லது வறுத்து, குச்சி ஐஸ்கிரீமைப் போலஉருட்டி அந்த குச்சியை நம்முன் நீட்டுவதற்கு முன்னால் அதில் வேர்க் கடலை தூளைத் தூவித் தருகிறார்கள்.

எங்களுடைய முகம் காட்டிய பல விதமான பாவங்களைப் புரிந்துகொண்ட வழிகாட்டி அடுத்து எங்களை அழைத்துச் சென்ற ஸ்டால், எங்கள் பசித்த வயிற்றில் பாலை வார்த்தது.

- பயணிப்போம்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x