Last Updated : 23 Sep, 2016 09:23 AM

 

Published : 23 Sep 2016 09:23 AM
Last Updated : 23 Sep 2016 09:23 AM

மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 7: ஒரே குடும்பத்தில் இரண்டு வெற்றியாளர்கள்!

தொழில் நிறுவனங்களை அதன் நிறுவனர் குடும்பத்தைச் சேர்ந் தவர்களே தலைமுறை தலை முறையாக நேரடியாக நிர்வகிப்பது நல் லதா அல்லது நிர்வாக மேலாண்மை போன்ற பாடங்களைப் படித்து பட்டமும் பயிற்சியும் பெற்ற தொழில்முறை நிர்வாகி கள் மூலம் நிர்வகிப்பது நல்லதா என்ற பட்டிமன்றம், தாராளமயம் வேரூன்றி விட்ட இக்காலத்திலும் தொடர்கிறது.

இப்படிப் பேசுவதற்குக் காரணம் என்னவென்றால் தொழிலதிபரின் குடும் பத்தில் பிறந்தவர்களுக்கு இயற்கை யாகவே நிர்வாகத்திறன் வந்துவிடாது, எனவே அவர்களுக்குப் பதிலாக அதற் கென்று படித்தவர்களை நியமித்தால் தான் நன்றாக நிர்வகிப்பார்கள் என்ற மனப்பான்மை பலரிடம் காணப்படுகிறது. இது தேவையற்ற விவாதம், பிழையான கருத்து என்பது இவ்விரு பிரிவிலும் வராத என்னுடைய கருத்து.

நான் இப்படி கூறுவதற்குக் காரணம், இந்தியத் தொழில் நிறுவனங்கள் தொடர்பான ஆய்வை நடத்திய பி.பி.சி. நிறுவனம், ‘ஆண்டின் சிறந்த தொழிலதிப ராக’ சென்னையைச் சேர்ந்த ‘டாஃபே’ நிறுவனத்தின் மல்லிகா சீனிவாசனைத் தேர்ந்தெடுத்துள்ளது என்ற அறிவிப்பு தான். ஓராண்டுக்கு முன்னால்தான் ‘டி.வி.எஸ். சுஸூகி’ நிறுவனத்தைச் சேர்ந்த அவருடைய கணவர் வேணு சீனிவாசனுக்கு, தரம் வாய்ந்த தயாரிப்புக் கான ‘டெமிங்’ விருது தரப்பட்டது; சர்வதேச அளவில் இந்த விருதுக்குப் புகழ் உண்டு என்பதால் இது அந்த நிறுவனத்துக்குக் கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரமாகும். இப்படி ஒரே குடும் பத்தில் கணவனும் மனைவியும் சிறந்த நிர்வாகிகளாக அங்கீகரிக்கப் பட்டிருக்கிறார்கள். அதுவும் அவர்கள் தொழிலதிபர்கள் என்ற பரம்பரையைச் சேர்ந்தவர் என்பதால் இந்த விவாதம் நினைவுக்கு வந்தது.

தங்களுடைய தந்தையர் மூலம் நிர்வகிக்கப்பட்ட தொழில் நிறுவனங் களை இவ்விருவரும் தனித்தனியாக, சுதந்திரமாக நிர்வகிக்கின்றனர். ‘டாஃபே’ என்பது அமால்கமேஷன்ஸ் தொழில் குழுமத்தின் அங்கம். மல்லிகாவின் தாத்தா எஸ்.அனந்தராமகிருஷ்ணன் தொடங்கியதுதான் அமால்கமேஷன்ஸ். நண்பர்கள் அவரை ‘ஜே’என்று செல்ல மாக அழைப்பார்கள். பிரிட்டிஷ்காரர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்னால் அவர்கள் நிர்வகித்த தொழில் வர்த்தக நிறுவனங்களை விலைக்கு வாங்கி, இணைத்து வெற்றிகரமாக நிர்வகித்தார். டபிள்யு.டபிள்யு. லேடன் போன்ற தொழில், வர்த்தக பிரபலங்கள் கூட அவருடைய தலைமையை ஏற்றது குறிப்பிடத்தக்கது!

டி.வி.எஸ்.சுஸூகி நிறுவனம் தன்னு டைய மரபணுவைத் தாத்தா டி.வி. சுந்தரம் ஐயங்காரிடம் இருந்து பெற்றது. பயணி களையும் சரக்குகளையும் ஏற்றிச் செல்ல அவர் நிறுவிய போக்குவரத்து நிறுவனம் (சதர்ன் ரோட்வேஸ் லிமிடெட்) தென் னிந்தியா முழுமைக்கும் திருப்தியளிக் கக்கூடிய சிறந்த சேவையை அளித்த துடன், பல்வேறு பக்கத்து நாட்டவர் களும் பாடம் கற்றுக் கொள்ளும் அளவுக் குச் சிறந்த நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டிருந்தது. அதையே அடித்தள மாகக் கொண்டுதான் டி.வி.எஸ். தொழில் குழுமம் வளர்ந்தது. இந்திய மோட்டார் வாகனத் தயாரிப்புத் தொழிலில் டி.வி.எஸ். தொழில் நிறுவனங்கள் இப்போதும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இரு தொழில் குழுமங்களும் குடும்ப வாரிசுகளால் நிர்வகிக்கப்பட்டு செழித்து ஓங்குகின்றன; எதுவுமே சோடை போகவில்லை என்பதை மல்லிகா, வேணு சீனிவாசன் வாங்கியுள்ள விருதுகள் உணர்த்துகின்றன.

இந்தியாவில் வாழ்ந்த ஆல்டர்கள்!

சென்னையில் அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி பெர்னி ஆல்டர் என்ப வரை முதல்முறையாகச் சந்தித்தபோது “ஸ்டீபன் ஆல்டர், டாம் ஆல்டர் என்ற (ஒன்றுவிட்ட) அமெரிக்கச் சகோ தரர்களுக்கு நீங்கள் உறவா?” என்று ஆவலை அடக்க முடியாமல் கேட்டு விட்டேன். இல்லையென்று அவர் புன்முறுவல் பூத்தார். ஸ்டீபன், டாம் என்ற அவ்விருவரும் இந்தியா பற்றி ஏராளமாக எழுதியிருக்கின்றனர். கதை, கதையல்லாத மற்ற விஷயங்கள் பற்றி ஸ்டீபன் நிறைய எழுதியிருக்கிறார். டாம் ஆல்டர் விளையாட்டு பற்றி அதிலும் குறிப்பாக கிரிக்கெட் குறித்து எழுதியிருக்கிறார். அமெரிக்கராக இருந்தும் கிரிக்கெட் மீது அவருக்கிருந்த ஆர்வம் வியப்பளிக்கிறது. ஸ்டீபன், டாம் இருவரும் கிறிஸ்தவர்கள், சுவீடனைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். பெர்னி ஆல்டரோ கிழக்கு ஐரோப்பிய நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குக் குடியேறிய யூதக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

ஸ்டீபன் ஆல்டர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். ‘ஆல் த வே டு ஹெவன்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய புத்த கத்தை வாசித்திருக்கிறேன். இமய மலைப் பகுதியில் வாழ்ந்த அமெரிக்கச் சிறுவனின் குழந்தைப் பருவம் பற்றியது அப்புத்தகம். முசோரியில் உள்ள உட்ஸ்டாக் பள்ளியில், வட இந்தியச் சமவெளிப் பகுதியில் பணியாற்றிய அமெரிக்க பாதிரிமார்களின் பிள்ளைகள் படித்தனர்.

1960-களின் பிற்பகுதியில் அயல் நாடு களில் இறைப் பணியாற்றியவர்களுக்கு அமெரிக்காவிலிருந்து பணம் அனுப்பு வது குறையத் தொடங்கியது. பாதிரி மார்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. இன்னொரு அமெரிக்கப் பள்ளி கொடைக்கானலில் செயல்பட்டது. இரு பள்ளிகளையுமே மூடியாக வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஒரு சனிக்கிழமை காலை இரு பள்ளிகளின் நிர்வாகக் குழுவும் அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசிக்கக் கூடின. ஸ்டீபனின் தந்தையான பாதிரியார் ஒரு பள்ளிக்கூடத்தின் முதல்வர். அவரு டைய அலுவலகத்தில்தான் ஆலோ சனைக் கூட்டம் நடந்தது. கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது காகிதத்தில் ஏரோப்ளேன் செய்து அதைக் காற்றில் தூக்கி எறிந்து அதன் பின்னாலேயே ஓடிக்கொண்டிருந்த சிறுவன் ஸ்டீபன், மலைப் பள்ளத்தாக்கில் ஓடிக்கொண் டிருந்த ஆழமான ஓடையில் விழுந்துவிட் டான். அனைவரும் பதறிப்போய் ஓடை இருந்த இடம் நோக்கி ஓடினர். அதற்குள் இந்த ஓலத்தைக் கேட்ட பள்ளிக்கூட நிர்வாகிகள் கூட்டத்தைப் பாதியில் விட்டுவிட்டு சிறுவனை மீட்கப் பின்தொடர்ந்தார்கள். சிறுவன் மீட்கப்பட்டு காப்பாற்றப்பட்டான்.

கொடைக்கானல் பள்ளியை மூடி விட்டு அதில் இருந்தவர்களை முசோரி யில் இருந்த பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட கிட்டத்தட்ட முடிவெடுத்த நேரத் தில்தான் இந்த விபத்து நடந்திருக்கிறது. மறுநாள் ஆலோசனைக் கூட்டம் நடந்த போது கொடைக்கானல் பள்ளிக்கூட நிர்வாகிகள் முடிவை மாற்றிக்கொண் டனர். இந்த இடமோ மலையும் பள்ளத் தாக்குகளும் ஓடைகளுமாக இருக் கிறது. நாளை இதே போல எங்கள் சிறுவனும் விழக்கூடும், எனவே நாங்கள் எப்படியோ சமாளித்து பள்ளியை நிர் வகித்துக் கொள்கிறோம் என்று கூறி விடைபெற்றார்கள். இப்போது கொடைக் கானலில் அது சர்வதேசப் பள்ளியாகத் தொடர்கிறது. முசோரியிலும் உட்ஸ்டாக் பள்ளி நடக்கிறது! ஸ்டீபன் ஆல்டர் பேராசிரியராகி விட்டார்.

- சரித்திரம் பேசும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x