Published : 24 Dec 2017 08:42 PM
Last Updated : 24 Dec 2017 08:42 PM

நெட்டிசன் நோட்ஸ்: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - அரசியல் என்பது யாருக்கானது?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன், 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார். இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக நெட்டிசன்கள் பகிர்ந்துவரும் கருத்துகளின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்…

Swaminathan Bharathi

நோட்டு தான் வெற்றியை தீர்மானித்ததாக சொன்னார் ஒரு பாஜக நண்பர்......

சரி.... நோட்டாக்கு போடவாவுமா பணம் கொடுப்பார்கள். உங்கள் போட்டியாளர் நோட்டோ விடம் தோற்று போய் உள்ளீர்கள் நண்பரே

Aazhi Senthil Nathan

தோற்றாலும் பரவாயில்லை என்று பணம் தராமால் களம் கண்ட திமுகவினருக்கு உள்ளபடியே மனம்நிறைந்த பாராட்டுகள். எங்கேயாவது இந்த ஆட்டம் நின்றாகவேண்டும். யாராவது அதை நிறுத்தியாகவேண்டும். அதைத் தொடங்கியதற்காக ஸ்டாலினை வாழ்த்தியே ஆகவேண்டும்.

ஆனால் திமுக வெற்றி பெறாமல் போனதற்கு வேறு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன. அதைப் பற்றி காது கொடுத்து கேட்கும் பொறுமையும் பிறர் மீதான மதிப்புடைமையும் அவர்களுக்கு வரும் போது விவாதிக்கலாம்.

இப்போதைக்கு தினகரன், நாம் தமிழர், நோட்டா ஆகியோருக்கு நல்வாழ்த்துகள்.

Govindarajan Vijaya Padma

மக்கள் ஹேப்பி அண்ணாச்சி !தினகரன் வெற்றி!

மகிழ்ச்சி ..இன்னும் இரண்டு மாதத்தில் அதிமுக கூட்டம் ,(ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி) தினகரனை வந்தடையும். மீண்டும் சசிகலா பொது செயலாளர் ஆவார். தினகரன் அடுத்த தமிழக முதல்வர் ஆவார்.

மக்கள் ஹேப்பி அண்ணாச்சி !

Suresh Kannan

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சசிகலா நேரடி அரசியலில் நுழைய முனைந்த போது தமிழக மக்களிடையே எழுந்த பரவலான, கடுமையான வெறுப்பை நம்மால் தெளிவாகவே அப்போது உணர முடிந்தது. இந்நிலையில் ஆர்கேநகர் இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் தினகரன்தான் அதிமுகவின் உண்மையாக முகம் என்பதை மக்கள் உணர்த்த விரும்புகிறார்கள் என்பதெல்லாம் 'சிந்தனாவாதிகளின்' கற்பனாவாதம்.

பொது சமூகத்தின் சில ஆதாரமான உணர்ச்சிகள் அத்தனை விரைவில் கூர்மழுங்கி விடாது. சசிகலாவை புறக்கணிக்க விரும்புவர்கள் தினகரனை ஏற்பார்கள் என்பதில் அடிப்படை தர்க்கமேயில்லை. திட்டமிட்டு வெறித்தனமாக பணத்தை இறைப்பதின் மூலம் தினகரன் தன்னுடைய முதலடியை வெற்றிகரமாக சாதிக்கத் துவங்கியிருக்கிறார்.

ஆனால் இது ஆபத்தான துவக்கம். தினகரனின் மெளனப் புன்னகையும் அசாத்தியமான தன்னம்பிக்கையும் அச்சுறுத்துவதாக இருக்கிறது.

நெருப்பிற்கு தப்பி எரிமலையின் உள்ளே வீழ்வதான நிலைமையே தமிழகத்தில் பல வருடங்களாக மாறி மாறித் தொடர்வது பரிதாபம்.

Veeramani Mani

எந்த செலவும் இல்லாமல் தினகரனை பிரபலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் எடப்பாடி, ஓபிஎஸ், அமைச்சர்கள் மற்றும் பாஜகவினர்.

தமிழக வரலாற்றிலேயே ஆறே மாதத்தில் அசுர வளர்ச்சி அடைந்த தலைவர் ஒருவர் உண்டென்றால் அது தினகரனாகத்தான் இருக்கும்.அந்த அளவுக்கு அவரை பட்டிதொட்டி தொடங்கி டெல்லி வரை வளர்த்தது மேற்சொன்னவர்கள்தான்.

கட்சி, சின்னம் முடக்கம், திகார் சிறை, கட்சியை விட்டு நீக்கம்,ரெய்டு என எந்த பேரிடி விழுந்தாலும் தில்லாக புன்னகையையே எதிராளிகளுக்கு பரிசளிக்கிறார் தினகரன்.

கட்சி சார்பற்ற பலரையும் டிடிவி தினகரனின் அணுகுமுறையும், ஆளுமையும் கவர்ந்திருப்பதை எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது.தமிழக அரசியலில் தினகரன் இன்று தவிர்க்க சக்தியாக மாறியிருப்பதற்கு காரணம் அவரது "டிஃப்ரண்ட் கேரக்டர்தான்".

பார்ப்போம் அந்த கேரக்டர் என்னவெல்லாம் செய்யப்போகிறது என்று???

Mani Mkmani

தினகரன் அழகாய் சிரிக்கிறார். தினகரன் சமாளிக்கிறார். தினகரன் மடக்குகிறார். தினகரன் வழங்குகிறார். தினகரன் ஜெயிக்கிறார். பணத்தை வாங்கிக் கொள்ளுவது உரிமை. ஆனால் மாற்றிப் போடவும் தெரியாத இந்த மடமை என்ன சர்வைவல் பண்ணப் போகிறதோ?

வ. கீரா

நாம் தமிழர்கள்கிட்ட தட்ட 30 ஆயிரம் பேர் தமிழ்நாட்டிலிருந்து சென்று ஆர்.கே நகர் தொகுதியில் பரப்புரை செய்தார்கள்....

விடை மிகச் சொற்பம்....

ஓட்டரசியல் முடிவுகளிலிருந்து நகர்ந்து வாருங்கள்..

இரா. முருகவேள்

அதிமுக அணிகளுக்கிடையேயான வாழ்வா சாவா போராட்டத்தில் பாஜக அலட்சியப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறாமல்தான் அவர்கள் இந்த நகரங்களை பணயக் கைதிகளாக வைத்திருக்கிறார்கள்.

Daniel Clinton

சோழர் பரம்பரையில் ஒரு MLA

 

Araathu R

ஆர் கே நகர் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்றே நினைத்தேன். அதிமுக ஓட்டு பிரிதல், ஆட்சி மீது இருக்கும் கடும் அதிருப்தி என்றெல்லாம் நினைத்தேன்.

2ஜி தீர்ப்பு வந்ததும், நகர் முழுதும் கனிமொழியை வாழ்த்தி ஒட்டப்பட்ட பெரிய பெரிய போஸ்டர்களை பார்த்ததும் "தப்பாச்சே" என்று தோன்றியது. 2ஜி யை கொட்டை எழுத்தில் மீண்டும் மக்கள் மனதில் கொண்டு வருகிறார்களே என்று நினைத்தேன்......

திமுகவின் பின்னடைவுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாமோ !

பால கணேசன்

எல்லாரும் பாஜக, நோட்டான்னு பேசுறப்ப நடுவுல நாலாவது இடம் பிடிச்ச நாம் தமிழர மறந்துர்றோம்.

இது ஒரு முக்கியமான முன்னெடுப்பு அந்த கட்சிக்கு.. ஏன்னா பல வருசங்களா பழந்தின்னு கொட்ட போட்ட கட்சிகளே திமுக கூட்டணியில சரண்டராக, நாம்தமிழர் வேட்பாளரையும் இறக்கி, நாலாவதாவும் உள்ள வந்திருக்காங்க.

"புரிஞ்சிக்கிடனும் மக்களே.." ங்கிற சீமான் முழக்கத்தோட மகத்தான வெற்றி இது..

வாழ்த்துகள் நாம் தமிழர்.

ஜ்யோவ்ராம் சுந்தர்

அதிமுக தோன்றிய பிறகு தமிழக அரசியல் களம் திமுக x அதிமுக என்றானது. இனி அது அதிமுக1 x அதிமுக2 என்றாகும்  

கருணாநிதியில்லாத திமுக வெத்து டப்பி என நிரூபணமான தினம் இன்று :-(

Ilangovan Geeta

தேர்தலில் முதலில் வருபவர்கள் எல்லாம் மக்களுக்கு விருப்பமானவர்கள் என்று சொல்லிவிட முடியாது.

ஏனெனில் இருப்பவர்களில் யாரையேனும் தேர்ந்தெடுத்துத் தொலைக்க வேண்டியது மக்களின் வாய்ப்புக்கேடு.

ஆனால் தேர்தலில் கடைசியாய் ஒதுக்கப்படுபவர்கள் கண்டிப்பாய் மக்களின் வெறுப்பிற்கானவர்களே.

அவர்களோடு அவர்களின் கொள்கைகளும் மக்களுடைய வெறுப்புக்கானவை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

அ.ப. இராசா

பணநாயகம் வென்றது என்பதெல்லாம் ஊளை உதார். கோடி கோடியா கொட்டி கொடுத்தாலும், சசிகலாவை மக்கள் ஏத்துப்பாங்கனு நெனைக்கிறிங்களா... தினகரனுக்கு மட்டும் எப்படி சாத்தியமாச்சு... யோசிங்க பாஸ்

Manasvi Uma

நோட்டாகிட்டகூட பிஜேபி தோத்துருச்சாம். நோட்டா ஓட்டு பிஜேபியை எதிர்த்தா? மொத்த கட்சிகளையும் எதிர்த்து போட்டதுதான. இன்றைய சூழ்நிலைல நோட்டாவுக்கு ஓட்டு போட்டவங்க மானஸ்தங்க.

Ezhumalai Venkatesan

2559167816524242314709755999733908012472011njpg100 

வரவர தமிழ்நாட்டு எலக்சனும் அம்பானி ஸ்டைல் பிசனசுக்கு மாறிகிட்டு வருதுடி பட்டு....

பல கம்பெனிங்க ஐடியா மேல ஐடியா செஞ்சி, போட்டிபோட்டுகிட்டு கோடிகோடியா செலவு பண்ணிபொருளுக்கு விளம்பரப்படுத்திகிட்டு திரிவாங்க..

அந்த கம்பெனிகளோட ரேட்டுகளை அலசிட்டு, கடைசியா அம்பானி வருவாரு.. அவுங்களவிட ஒரு ரூபா கம்மியா தரேன்னு சொல்லுவாரு..எல்லா பயலும் அங்கே ஓடுவானுங்கடி..

அந்த மாதிரி, வெயிட் பண்ணி பார்த்து கடைசியா எவன் டாப்பா குடுக்கறானோ அதுக்கு மேல கொஞ்சம் வெச்சி குடுத்தா மேட்டர் ஓவர்டி..

Manikandan Kalidas

அதிமுக மீண்டும் உயிர்த்தெழுகிறது . தினகரன் வடிவில். அவ்வளவு எளிதில் அதிமுக அழிந்து விடும் என்று எனக்கு தோன்றவில்லை. இது வக்காலத்து அல்ல. நிதர்சனமான உண்மை.

Vini Sharpana

தொப்பி இருந்தால் வெற்றி பெற்றுவிடுவார் என்பதால் குக்கரை கொடுத்தார்கள். ஆனால், கொடுக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே குக்கர் சத்தத்தை மக்களிடையே 'கூக்'குரலெடுக்க வைத்து வெற்றி பெறுவதெல்லாம் நினைத்துப் பார்க்ககூட முடியாத சாதனை. பாஜக... ஓபிஎஸ்... இபிஎஸ் என அனைவரின் சதியையும் ஓடவிட்டு தினக'ரன்' என்பதை நிரூபித்துவிட்டார். அதுவும் ஜெயலலிதா பெற்ற வாக்கு வித்தியாசத்தைவிட அதிக வாக்குகள். ஆர்.கே நகர் தொகுதி எம்.எல்.ஏ தினகரனுக்கு தித்திப்பான வாழ்த்துகள்

மன்னை முத்துக்குமார்

ஆர் கே நகர் தேர்தலில் ஒரு ஓட்டுகூட செல்லாத ஓட்டுகள் கிடையாது.ஜனாதிபதி தேர்தலில் இரண்டு ஓட்டுகள் செல்லாத ஓட்டுகள்.

Rajasekaran Devibharathi

தினகரனின் வெற்றி அபத்தமானதாக இருக்கலாம், வருங்காலங்களில் சி,ஆர்.சரஸ்வதி, தங்கத் தமிழ்ச் செல்வன், வெற்றிவேல் முதலானவர்கள் தமிழ் சமுதாயத்தின் தலைவிதையை நிர்ணயிக்கப்பது பற்றிய கற்பனைகள் தரும் பதற்றத்தில் மூழ்கியிருக்கலாம், ஆனால் கருணாநிதி என்ற அரசியல் சாணக்கியரை, திமுக என்ற திராவிட இயக்கத்தை எம்.ஜி.ஆராலும் ஜெயலலிதாவாலும் தொடர்ந்து வீழ்த்த முடிந்திருக்கிறதே, அதற்கான காரணங்களைப் பரிசீலிக்கலாமே, சும்மாவாச்சும் பரிசீலக்கலாம், ஏதாவது தோன்றும் அல்லவா?

Ram Thangam

டிடிவி தினகரன் சசிகலாவாக ஆசைப்படவில்லை. ஜெயலலிதாவாக மாற தான் ஆசைப்பட்டார்.ஜெ.வின் நாற்காலியிலும் உட்கார போகிறார். அரசியல் என்பது சாணக்கியர்களுக்கானது என்பது இப்போது நன்றாக புரிகிறது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x