Published : 17 Mar 2022 04:44 PM
Last Updated : 17 Mar 2022 04:44 PM

துலாம், விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! - 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

கிரகநிலை:

தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன், குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

இம்மாதம் 21ம் தேதி - திங்கட்கிழமை - அன்று ராகு பகவான் ராசிக்கு மாறுகிறார்.

இம்மாதம் 21ம் தேதி - திங்கட்கிழமை - அன்று கேது பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டுச் சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வீண் மனக்கவலை உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்குவன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தைத் தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாகப் பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். பெண்கள் திறமையான பேச்சின் மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் குறையும். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: ஸ்ரீகிருஷ்ண பகவானை பிரார்த்தனை செய்து வழிபட்டு வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

*********************

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:

ராசியில் கேது - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி - சுக ஸ்தானத்தில் புதன், குரு - சப்தம ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

இம்மாதம் 21ம் தேதி - திங்கட்கிழமை - அன்று ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இம்மாதம் 21ம் தேதி - திங்கட்கிழமை - அன்று கேது பகவான் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவு உண்டாகும். உடற்சோர்வு உண்டாகலாம். பூர்வீகச் சொத்துகள் மூலம் வரும் வருமானம் தாமதப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும். தொழில் வியாபாரம் மெத்தனமாக காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசி வியாபாரம் செய்வது நல்லது. போட்டிகளைக் கண்டுகொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் பெறும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போது கவனம் தேவை. பெண்கள் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். கலைத்துறையினர் நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது. மாணவர்களுக்கு உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது..

பரிகாரம்: ஸ்ரீசரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட்டு வர எல்லா தடங்கல்களும் நீங்கும். காரிய வெற்றி ஏற்படும்.

************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்லதவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x