Published : 10 Mar 2022 05:44 AM
Last Updated : 10 Mar 2022 05:44 AM
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மேஷம்:
கிரகநிலை:
தனவாக்கு ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி - லாபஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.
இம்மாதம் 15ம் தேதி சூர்ய பகவான் உங்களுடைய விரய ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார்.
பலன்கள்:
இந்த வாரம் எல்லாக் காரியங்களும் அனுகூலமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். செயல்திறன் அதிகரிக்கும்.
குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும். பெண்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். கலைத்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அரசியல்துறையினருக்கு வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பரிகாரம்: முருகனை வணங்கி வர காரிய வெற்றி உண்டாகும். கவலை தீரும்.
*****************
ரிஷபம்:
கிரகநிலை:
ராசியில் ராகு - சப்தம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.
இம்மாதம் 15ம் தேதி சூர்ய பகவான் உங்களுடைய லாப ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார்.
பலன்கள்:
இந்த வாரம் நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சினை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம்.
கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாகப் பேசுவது நல்லது. பெண்களுக்கு மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். கலைத்துறையினருக்கு எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாக மற்றவரை முன்னிறுத்திதான் தப்பித்துக் கொள்ள வேண்டி வரும். அரசியல் துறையினருக்கு உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். மனதில் உற்சாகம் ஏற்படும்.
பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி மகாலட்சுமியை வழிபட பணக்கஷ்டம் தீரும். இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
**************
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT