Published : 31 Jan 2021 16:38 pm

Updated : 31 Jan 2021 16:38 pm

 

Published : 31 Jan 2021 04:38 PM
Last Updated : 31 Jan 2021 04:38 PM

மூலம், பூராடம், உத்திராடம், வார நட்சத்திர பலன்கள் (பிப்ரவரி 1 முதல் 7ம் தேதி வரை) 

vaara-natchatira-palangal

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மூலம் -


நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் வாரம்.

குடும்ப உறவுகள் பலப்படும். உறவுகளிடம் ஏற்பட்ட மன வருத்தம் அகலும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவதால் ஆதாயம் உண்டாகும்.

உத்தியோகத்தில் இருந்த பணிச்சுமை அகலும். உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து உங்களுக்கு சாதகமாக மாறும்.

தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பாக முக்கியமான ஒப்பந்தங்கள் நிறைவேறும் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். தனியாக தொழில் தொடங்கும் வாய்ப்பும் ஒரு சிலருக்கு உண்டு.

பயணம் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வருமானம் சிறப்பாக இருக்கும். நிலம் தொடர்பான தரகுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு திருப்திகரமான வருமானம் உண்டாகும்.

பெண்களுக்கு சுபகாரிய விசேஷங்கள் முடிவாகும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் உறுதியாகும். கலைஞர்களுக்கு வெளிநாட்டில் வசிக்கும் நபர் மூலமாக வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -
திங்கள் -

எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சிசனைகள் முடிவுக்கு வரும்.

செவ்வாய் -
மனதில் தேவையற்ற சஞ்சலம் ஒன்று உருவாகும். குழப்பங்கள் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் நிம்மதி இருக்காது. மாலை நேரத்தில் கவலை தரும் செய்தி வரும். தேவையற்ற கருத்துகளை எங்கும் தெரிவிக்காமல் இருப்பது நல்லது.

புதன் -
அலுவலகப் பணிகளில் அதிக முனைப்போடு செயல்பட்டு வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.

வியாழன் -
கிடைக்கின்ற செய்திகள் அனைத்தும் மன நிம்மதியையும் திருப்தியையும் தரக்கூடியதாக இருக்கும். அயல்நாட்டில் வசிக்கும் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த பணம் இன்று கைக்கு வந்து சேரும்.

வெள்ளி -
எதிர்காலம் கருதி சில திட்டங்களைத் தீட்டுவீர்கள். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது வியாபாரம் தொடங்குவது பற்றிய சிந்தனைகள் அதிகமாக ஏற்படும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

சனி -
எடுத்த முயற்சிகள் அனைத்திலும் முழு வெற்றியைக் காணக்கூடிய நாள். பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை ஒப்பந்தம் கிடைக்கும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

ஞாயிறு -
பொறுமை, நிதானம் மிக அவசியம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். கடன் வாங்குவது அல்லது கடன் கொடுப்பதோ கூடாது. தேவையற்ற விவாதங்களைச் செய்யாமல் இருக்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
விநாயகப்பெருமானை வணங்குங்கள். விநாயகர் பாமாலை படியுங்கள். அதிக நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
*********************

பூராடம் -

சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும் வாரம்.

குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். அதற்குத் தேவையான பண வரவு தாராளமாக இருக்கும்.

உறவினர்களாலும், சகோதரர்களாலும் நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அலுவலகப் பணிகளில் நிம்மதி நீடிக்கும்.
தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள், வியாபார வாய்ப்புகள் கிடைக்கும்.

பெண்களுக்கு ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முற்றிலுமாக விலகும். மனதிலிருந்த குழப்பங்கள் அனைத்தும் தீரும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும்.

மாணவர்கள் ஆரோக்கியத்திலும் கவனம் எடுப்பது நல்லது. கலைஞர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாக வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -
திங்கள் -

எதிர்பாராத நன்மைகள் கிடைக்க கூடிய நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகப் பணிகளில் சக ஊழியர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள். வியாபார பயணங்களால் ஆதாயம் தருவதாக இருக்கும். ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.

செவ்வாய் -
சுறுசுறுப்பாகப் பணியாற்றி வேலைகளை சிறப்பாக செய்து முடிக்கும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். கடன் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு இன்று கடன் தொடர்பான நல்ல தகவல் உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார வளர்ச்சிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும். கமிஷன் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான தகவல் கிடைக்கும்.

புதன் -
நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். அலுவலகத்தில் சக ஊழியர்களோடு அனுசரித்துச் செல்லுங்கள். தேவையில்லாமல் அவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

வியாழன் -
அலுவலகப் பணிகளில் சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

வெள்ளி -
பயணங்களால் ஆதாயம் கிடைக்க கூடிய நாள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து தேதி குறிக்கப்படும் வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு புத்திர பாக்கியம் தொடர்பான செய்தி உறுதியாகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் இன்று கையெழுத்தாகும்.

சனி -
குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குழந்தைகளின் கல்வி தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகளுக்கு திட்டம் தீட்டுவீர்கள்.

ஞாயிறு -
திட்டமிட்ட காரியங்களும் திட்டமிடாத காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். கடன் அடைக்கும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் சுப விசேஷங்கள் பற்றிய விஷயங்கள் முடிவாகும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ ஹனுமன் வழிபாடு செய்யுங்கள். அனுமனுக்கு வடை மாலை சாற்றி வழிபட நன்மைகளை அதிகமாக்கும். எதிர்ப்புகள் அனைத்தும் விலகும்.
**************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!



மூலம்பூராடம்உத்திராடம்வார நட்சத்திர பலன்கள் (பிப்ரவரி 1 முதல் 7ம் தேதி வரை)வார நட்சத்திர பலன்கள்பலன்கள்நட்சத்திர பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்MoolamPooradamUtthiradamVaara natchatira palangalPalangalNatchatira palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x