Published : 10 Jan 2021 16:02 pm

Updated : 10 Jan 2021 16:02 pm

 

Published : 10 Jan 2021 04:02 PM
Last Updated : 10 Jan 2021 04:02 PM

ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை ; வார நட்சத்திர பலன்கள் - (ஜனவரி 11 முதல் 17ம் தேதி வரை) 

vaara-natchatira-palangal

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

ரோகிணி -


வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும் வாரம். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. அல்லது தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சகோதரர்களால் பெருமளவு நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தோடு சென்று வரும் வாய்ப்பு உள்ளது.

குல தெய்வ வழிபாடு செய்ய முற்படுவீர்கள். அனைத்தும் சாதகமாக இருக்கிறது. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். வியாபாரம் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு மன மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும்.
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். வீடு மனை தொடர்பான சொத்து விஷயங்கள் சாதகமாக இருக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

இந்த வாரம் -
திங்கள்-

எதிர்பார்த்த பணத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கமிஷன் தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும் நீண்ட நாளாக வராமலிருந்த தொகை கைக்கு வந்து சேரும்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலைகள் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். சொத்து சம்பந்தமாக எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

புதன்-
அலைச்சல்களும் அதனால் உடல் உபாதைகளும் ஏற்படும். சிறிய அளவிலான மருத்துவச் செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு. மற்றவர்கள் நலனுக்காக நீங்கள் அதிகம் உழைக்க வேண்டியதிருக்கும்.

வியாழன்-
உற்சாகமான நாளாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். பழைய பொருட்களை மாற்றி புதிய பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.

வெள்ளி-
தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் போடுவதில் அதிக கவனம் வேண்டும். வியாபாரத்தில் கவனமாக இருக்கவேண்டும். கடன் கொடுப்பது அல்லது வாங்குவது கூடாது.

சனி-
மனதை வருத்திக் கொண்டிருந்த முக்கியமான பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய வியாபாரம் தொடங்குவது பற்றிய முன்னேற்றமான தகவல் கிடைக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

ஞாயிறு-
வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். கடைகள் வணிக நிறுவனங்கள் நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய கிளைகளைத் தொடங்கும் சிந்தனை உருவாகும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். நண்பர்களோடு சேர்ந்து புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகளைச் செய்வீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ முருகப் பெருமான் வழிபாடு செய்யுங்கள். கந்த சஷ்டி கவசம், சண்முகக் கவசம் போன்றவற்றைப் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
*****************

மிருகசீரிடம் -

பண வரவுகளால் மன நிறைவு உண்டாகும் வாரம்.

எதிர்பாராத பண உதவி கிடைக்கப் பெறுவீர்கள். மாமன் வகை உறவுகளிடமிருந்து தேவையான உதவிகள் கிடைக்கும். சிறிய அளவிலான தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன. சமுதாயத்தில் திடீர் புகழ் கிடைக்கும். சாதனைகளை செய்யக்கூடிய வாரமாக இருக்கும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் பிள்ளைகளுக்கு திருமணம் நிச்சயமாகும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

இதுவரை கிடைக்காமலிருந்த அங்கீகாரம், மதிப்பு மரியாதை இப்போது கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டிலிருந்து நண்பர்கள் மூலமாக முதலீடுகள் கிடைக்கும்.

புதிய தொழில் வாய்ப்புகளும் ஒரு சிலருக்கு கிடைக்கும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் இந்த வாரம் அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.

புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு இப்பொழுது புத்திர பாக்கியம் உருவாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் பெண் நண்பர்கள் மூலம் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
வருமானம் இரு மடங்காக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்டவை கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமலிருந்த பணம் வசூலாகும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சி சாதகமாக இருக்கும்.

செவ்வாய்-
வீண் விரயங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. வீட்டு உபயோக பொருட்கள் பழுது ஏற்படும். செலவுகள் எதிர்பாராத அளவிற்கு இருக்கும். அலுவலகம் மற்றும் பணிபுரியும் இடங்களில் வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம்.

புதன்-
செலவுகளும், செலவுகளுக்கேற்ற வருமானமும் உண்டாகும். நீண்ட நாள் மனதை வருத்திக் கொண்டிருந்த பிரச்சினை இன்று முடிவுக்கு வரும். வங்கிக் கடன் தொடர்பான சிக்கல்கள் தீரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

வியாழன்-
இல்லத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. நண்பர்களுடனான தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் நீண்டநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும்.

வெள்ளி-
நல்ல பலன்கள் நடைபெறும் நாள். ஆரோக்கியப் பிரச்சனைகள் தீரும். கடன் தொடர்பான முக்கியமான பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். சொத்து சம்பந்தமான பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிவடையும். வியாபாரிகளுக்கு வியாபாரம் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.

சனி-
தேவையற்ற பயணங்கள் ஏற்படும். அலைச்சல் அதிகமாக இருக்கும். செலவுகள் எதிர்பாராத வகையில் ஏற்படும். சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம்.

ஞாயிறு-
எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகளில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வரும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
நவக்கிரக வழிபாடு செய்யுங்கள். கோளறு பதிகம் படித்து வாருங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
*************

திருவாதிரை -

எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும் வாரம் இது.

பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சொத்து தொடர்பான பிரச்சினைகளில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குறிப்பாக கணவன்-மனைவிக்குள் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். தடைப்பட்டுக் கொண்டிருந்த புத்திர பாக்கியம் இப்போது கிடைக்கும்.

உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவச் செலவுகளால் திக்குமுக்காடிக் கொண்டிருந்தவர்களுக்கு இனி மருத்துவச் செலவுகள் அறவே இல்லாமல் போகும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக முதலீடுகளைச் செய்யாமல் இருக்கவேண்டும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி முழு வெற்றியைத் தரும்.

இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பெண்களுக்கு தொழில், வியாபார முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுய தொழில் தொடர்பான விஷயங்களில் ஆதரவு கிடைக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.

கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் உங்களின் வாய்ப்புகளுக்காக உதவி செய்வார்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத அளவுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

இந்த வாரம் -

திங்கள்-
தொழில் தொடர்பான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். பெண்களின் திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் முழு வெற்றியைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உறவினர்களிடம் ஏற்பட்ட வருத்தங்கள் நீங்கும்.

புதன்-
தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியைத் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். முதலீடுகளைப் பெற்றுத் தருவார்கள்.

வியாழன்-
மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும். சுபச்செலவுகள் ஏற்படக் கூடிய நாளாகவும் இருக்கிறது. மொத்தத்தில் மகிழ்ச்சிகரமான நாள்.

வெள்ளி-
குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

சனி-
சகோதரர்களுடன் மனம்விட்டுப் பேசி முக்கியமான பிரச்சினைகளில் தீர்வு காண்பீர்கள். அலுவலக வேலைகளில் இருந்த மந்த நிலை மாறி, எளிதாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.

ஞாயிறு-
தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். தொழில் அல்லது வியாபாரம் பேச்சுவார்த்தைகளில் ஏதும் இருந்தால் தள்ளி வைக்க வேண்டும். வீண் விவாதங்கள் சச்சரவுகள் செய்ய வேண்டாம். எதிர்பாராத செலவுகள் அதிகமாக ஏற்படும் நாள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
சிவ வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிக அளவில் ஏற்படும். நினைத்தது நிறைவேறும்.
*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!


ரோகிணிமிருகசீரிடம்திருவாதிரை ; வார நட்சத்திர பலன்கள் - (ஜனவரி 11 முதல் 17ம் தேதி வரை)திருவாதிரைவார நட்சத்திர பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்RohiniMirugaseeridamThiruvathiraiVaara natchatira palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x