Published : 15 Oct 2020 10:26 am

Updated : 15 Oct 2020 10:26 am

 

Published : 15 Oct 2020 10:26 AM
Last Updated : 15 Oct 2020 10:26 AM

மேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்; அக்டோபர் 15 முதல் 21ம் தேதி வரை

vaara-rasipalan

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம்

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்)

இந்த வாரம் பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும்.

முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும். வாடிக்கையாளர்கள் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரத்தும் திருப்தி தரும். மேலிடம் உங்களிடத்தில் நல்ல அணுகுமுறையை நீட்டிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பது மற்றவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். வாழ்க்கைத் துணையின் நலனில் அக்கறை காண்பிப்பீர்கள்.

பெண்களுக்கு முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களில் கூட கவனமாகச் செய்வீர்கள். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள்.

அரசியல்துறையினருக்கு வீண் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு சக மாணவர்களின் கருத்துக்களுக்கு மாற்று கருத்துகளை கூறாமல் அனுசரித்துச் செல்வது சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்ட கிழமை: திங்கள், செவ்வாய்
எண்: 2, 9
திசை: கிழக்கு, தென்கிழக்கு
நிறம்: வெள்ளை, சிவப்பு
பரிகாரம்: சிவபெருமானுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். எதிர்ப்புகள் விலகும். எல்லா நலன்களும் உண்டாகும்.
****************************

ரிஷபம்

(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

இந்த வாரம் திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எதையும் செய்வது நல்லது. எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிக முயற்சி செய்ய வேண்டி இருக்கும். பயணங்கள் ஏற்படலாம். அனைத்துத் தடைகளும் அகலும்.

தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். பணியாளர்கள் செயல்கள் உங்களுக்கு கோபத்தைத் தூண்டும்படியாக இருக்கலாம். லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச் சுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி இருக்கலாம். நெருப்பு, ஆயுதங்களை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

குடும்பத்தில் மன நிறைவு ஏற்படும் வகையில் சம்பவங்கள் நடக்கும். வாழ்க்கைத் துணையால் நன்மை உண்டாகும். குழந்தைகளுக்காகப் பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். உறவினர், நண்பர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம்.

பெண்களுக்கு கடின முயற்சியின் பேரிலேயே காரியங்கள் பெற்றி பெறும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து சந்தோஷமான செய்திகள் வந்து சேரும்.

கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண அதிக முயற்சி செய்து பாடங்களைப் படிக்க வேண்டி இருக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட கிழமை: புதன், வெள்ளி
எண்: 5, 6
திசை: தெற்கு, தென்மேற்கு
நிறம்: வெள்ளை, பச்சை
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வாருங்கள். பொருளாதாரச் சிக்கல் தீரும். பணவரத்து கூடும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
********************

மிதுனம்

(மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

இந்த வாரம் குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும்.

முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு வேகம் இருக்கும். பணவரத்து தாமதப்படலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களின் வீண் பேச்சால் மனவருத்தம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படும். வீண் பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கிச் செல்வது நன்மை தரும்.

உறவினர் நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை. பெண்களுக்கு குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். கலைத்துறையினருக்கு காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

அரசியல்துறையினருக்கு வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம். மாணவர்களுக்கு முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கூடுதல் மதிப்பெண் பெற அதிக நேரம் படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமை: புதன், வெள்ளி
எண்: 5, 9
திசை: மேற்கு, வடமேற்கு
நிறம்: சிவப்பு, பச்சை
பரிகாரம்: புதன்கிழமையில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தரும்.
**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

மேஷம்ரிஷபம்மிதுனம்; வார ராசிபலன்; அக்டோபர் 15 முதல் 21ம் தேதி வரைமிதுனம்வார ராசிபலன்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்Vaara rasipalan

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author