Published : 13 Sep 2020 14:37 pm

Updated : 13 Sep 2020 14:37 pm

 

Published : 13 Sep 2020 02:37 PM
Last Updated : 13 Sep 2020 02:37 PM

அஸ்தம், சித்திரை, சுவாதி - வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 14 முதல் 20 வரை)

vaara-natchatira-palangal

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

அஸ்தம் -


பெருமளவு நன்மைகள் நடைபெறும் வாரம்.

எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். சகோதரர்கள் ஒற்றுமை பலப்படும். சொத்துகள் தொடர்பான பிரச்சினைகளில் சமாதானம் ஏற்பட்டு பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும்.

பணியிலிருந்த அழுத்தங்கள் படிப்படியாக விலகும். எதிர்பாராத பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டாகும் வாய்ப்பு உள்ளது. பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வேலை தொடர்பாக நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைக்கும்.

வியாபாரம் மற்றும் தொழிலில் படிப்படியான சீரான வளர்ச்சி ஏற்படும். வங்கி மற்றும் நிதி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும்.

மாணவர்கள் கலைகள் சம்பந்தமான விஷயங்களில் ஆர்வம் காட்டுவார்கள். பெண்களுக்கு எதிர்பார்த்த தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்தும் பேசி தீர்க்கப்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளைக் கையாளுவீர்கள். பெண்கள் தங்கள் எடுக்கின்ற முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தேவையான உதவிகளும் ஆதரவும் கிடைக்கும்.

செவ்வாய் -
எந்த ஒரு விஷயத்திலும் அதிக கவனம் தேவை. அலட்சியமாக இருக்க வேண்டாம். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். நாம் நினைப்பது போல் எதுவும் நடக்கவில்லையே என்ற ஆதங்கமும் எரிச்சலும் அதிகமாகும். பொறுமையாக இருக்க வேண்டும்.

புதன் -
ஆதாயம் தரும் விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான உதவிகளும், சலுகைகளும் கிடைக்கும். அலுவலகப் பணிகள் எளிதாக முடியும். சுபகாரிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு அது தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட விஷயங்களுக்கு முகூர்த்த தேதி குறிக்கும் வாய்ப்பு உள்ளது.

வியாழன் -
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களிடம் உதவிகளை எதிர்பார்த்து இருப்பார்கள். நீங்களும் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்து தருவீர்கள். குடும்பச் செலவுகள் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும். புதிய வியாபாரம் தொடர்பான வாய்ப்பு கிடைக்கும்.

வெள்ளி -
பயணங்களைத் தவிர்க்கவும். கடன் வாங்காதீர்கள். உங்கள் எரிச்சலையும் கோபத்தையும் குழந்தைகளிடமும் வாழ்க்கைத்துணையிடமும் காட்ட வேண்டாம். மனசஞ்சலம் ஏற்படும்.

சனி -
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணியில் சில சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் ஒற்றுமை ஏற்படும். சகோதரர்களால் ஒரு சில உதவிகளும் ஆதாயமும் ஏற்படும்.

ஞாயிறு -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். மனதை உறுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை இன்று முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சக்தி வடிவான அம்மனை வழிபடுங்கள். அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி, குங்கும அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
*************************

சித்திரை -

தேவையான உதவிகள் அனைத்தும் சமயத்தில் கிடைக்கும்.

மனக் குழப்பங்களும் மனபாரமும் தீரும். குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும் அளவுக்கு உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பும், அவர்கள் மூலமாக ஆதாயம் தரக்கூடிய விஷயங்களும் நடக்கும்.

பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். அலுவலகப் பணியில் இயல்பான நிலை தொடரும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

வியாபாரம் மற்றும் தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள் தீர்வதற்கு உண்டான பணத் தேவைகள் பூர்த்தியாகும். பெண்களுக்கு நன்மைகள் பலவாறாக நடக்கும்.

பொருளாதாரப் பிரச்சினைகள் தீருவதற்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் தேவையான உதவிகளைச் செய்து தருவார்கள். மாணவர்கள் விரும்பிய கல்வி கற்கும் வாய்ப்புகள் எளிதாக கிடைக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த, தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். மனநிறைவு ஏற்படும் நாள். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றம் பற்றிய தகவல் உறுதியாகும்.

செவ்வாய் -
எதிர்காலத் திட்டங்களை வகுப்பீர்கள். குடும்ப நலன் கருதி ஒரு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நன்மைகள் பெருகும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் இயல்பான நிலையே தொடரும். அலுவலகப் பணிகளில் கூடுதல் சுமை ஏற்பட்டாலும் சமாளித்து வேலைகளைச் செய்வீர்கள்.

புதன் -
தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம். சர்ச்சைக்கு உரிய கருத்துக்களைத் தெரிவிக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. எதிர்பார்த்த சில விஷயங்கள் காரணமின்றி தள்ளிப் போகும்.

வியாழன் -
பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் லாபம் கிடைக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுய தொழில் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் ஒப்பந்தங்களாக மாறும்.

வெள்ளி -
அலுவலகத்தில் சக ஊழியர்களின் பணியை பகிர்ந்து கொள்ள வேண்டியது வரும். எதிர்பார்த்த பண உதவிகள் உள்ளிட்ட சில விஷயங்கள் தாமதமாகலாம். தேவையில்லாத மன உளைச்சல் மற்றும் மனக் குழப்பங்கள் ஏற்படும்.

சனி -
மனதை உறுத்திக் கொண்டிருந்த பிரச்சினைகளில் நல்ல முடிவு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலிலும் வியாபாரத்திலும் சீரான வளர்ச்சி இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும்.

ஞாயிறு -
குடும்பத்தாருடன் நேரத்தைச் செலவிடுங்கள்.எந்த ஒரு பிரச்சினைகளிலும் தலையிட வேண்டாம். அமைதியும் தியானமும் மிக மிக முக்கியம். சர்ச்சைக்கு உரிய விஷயங்களைப் பேச வேண்டாம்.

வணங்க வேண்டிய தெய்வம் -
அபிராமி அந்தாதி பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நடக்கும்.
*******************************

சுவாதி -

அதிக நன்மைகள் ஏற்படும் வாரம்.

இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தும் இனி எளிதாக முடியும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். தாய் தந்தையரின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் இப்போது தொடரும். அதற்குத் தேவையான அனைத்து பொருளாதார உதவிகளும் கிடைக்கும்.

அலுவலகத்தில் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை சலுகைகளும் பதவி உயர்வு உள்ளிட்டவைகளும், ஊதிய உயர்வும் கிடைக்கும். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி சுறுசுறுப்புக்கு மாறும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். புதிய தொழில் வாய்ப்புகளும் வியாபார வாய்ப்புகளும் கிடைக்கும் தொழிலை விரிவுபடுத்துவதற்கான முயற்சியில் இறங்கி வெற்றி காண்பீர்கள். பெண்களுக்குச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமுகமாக முடிவுக்கு வரும்.

எதிர்காலம் பற்றிய கவலைகள் தீரும். அதிக நன்மைகள் நடைபெறும் வாரமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவார்கள். கலைஞர்களுக்கு சக நண்பர்கள் மூலமாக வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -
திங்கள் -

நன்மைகள் நடைபெறும் நாள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். சகோதரர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணையின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள்.

செவ்வாய் -
நண்பர்களால் அதிக உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும்.

புதன் -
மன சஞ்சலத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். ஆரோக்கியம் பற்றிய கவலை தோன்றி மறையும். எதிர்காலம் கருதி ஒரு சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.தொழில் மற்றும் வியாபாரத்தில் சற்று நிதானமாக இருக்க வேண்டும்.

வியாழன் -
எதிர்பார்த்த உதவிகள் மட்டுமல்லாமல் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தினர் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.வேலை தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.

வெள்ளி -
தேவையற்ற பயணங்கள் வேண்டாம். நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தேவையில்லாத சர்ச்சை பேச்சு வார்த்தைகளை வைத்துக் கொள்ள வேண்டாம். குழந்தைகளிடம் கோபத்தைக் காட்டாதீர்கள். வாழ்க்கைத் துணையிடம் தேவை இல்லாத வாக்குவாதம் வைத்துக்கொள்ள வேண்டாம்.

சனி -
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சினைகள் சமாதானமாகும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் பேசி முடிவாகும். தாயாரின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் தொல்லை குறையும்.

ஞாயிறு -
குழந்தைகளின் கல்வி பற்றிய அக்கறை தோன்றும். அவர்களின் கல்வி தொடர்பான விஷயங்களில் புது முயற்சி எடுப்பீர்கள். வீட்டில் தேவையில்லாத பொருட்கள் அனைத்தையும் ஒதுக்கி வைப்பீர்கள். பழுதான பொருட்களை சரி செய்து மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
கால பைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவர் அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!


அஸ்தம்சித்திரைசுவாதி - வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 14 முதல் 20 வரை)சுவாதிவார நட்சத்திர பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்Vaara natchatira palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author