விருச்சிகம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

பராபவ வருடம் - 14.04.2026 முதல் 13.04.2027 வரை
விருச்சிகம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
Updated on
2 min read

சங்கடங்கள் வரும்போது தடுமாறாதே.. சந்தர்ப்பங்கள் வரும்போது தடம் மாறாதே என்ற வரிகளுக்கேற்ப எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் தடம் மாறாமல் செயல்படும் விருச்சிக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு 4-வது ராசியில் இந்த பராபவ தமிழ் புத்தாண்டு பிறப்பதால் மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். புது எண்ணங்கள் மனதில் தோன்றும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். பழைய கடனை பைசல் செய்யும் அளவுக்கு வருமானம் உயரும். அடகிலிருந்த நகைகளையும் மீட்பீர்கள். சொந்தமாக வீடு, வாகனம் வாங்குவீர்கள். குழப்பங்கள் அனைத்தும் தீர்ந்து, குடும்பத்தில் அமைதி திரும்பும். பிள்ளைகளின் அடிமனதில் இருந்த தாழ்வு மனப்பான்மையை போக்கி தன்னம்பிக்கை தருவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பிள்ளைகள், சொந்த பந்தங்களுக்கு மத்தியில் உங்களை பெருமைப்படுத்துவார்கள். சிலர் இருக்கும் வீட்டை விட்டு நல்ல வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள்.

குரு பகவானால் ஏற்படும் பலன்கள்: 14.04.26 முதல் 01.06.26 வரை குரு பகவான் 8ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வீண் குழப்பங்கள், மன உளைச்சல் வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையை கவனமாக கையாளுங்கள். முடிந்த வரையில் இரவு நேர பயணங்களை தவிர்த்து விடுங்கள். 02.06.26 முதல் 31.10.26 வரை மற்றும் 25.01.27 முதல் 13.04.27 வரை குரு 9ம் வீட்டுக்கு செல்வதால் எதிர்பாராத திடீர் பண வரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். 31.10.26 முதல் 25.01.27 வரை அதிசாரமாக குருபகவான் 10ம் வீட்டுக்கு செல்வதால் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வேற்று மொழிக்காரர்களால் ஆதாயமடைவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

ராகு- கேதுவால் ஏற்படும் பலன்கள்: 14.04.26 முதல் 05.12.26 வரை ராகு 4ம் வீட்டிலும், கேது 10ம் வீட்டிலும் தொடர்வதால் அம்மாவின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். சின்ன சின்ன அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். அடிக்கடி கோபப்படுவீர்கள். பிரபலங்களின் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட வேலையை தடையின்றி முடிப்பீர்கள். 05.12.26 முதல் 12.04.27 வரை ராகு 3ம் வீட்டுக்கும், கேது 9ம் வீட்டுக்கும் வருவதால் வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வீட்டில் தள்ளிப் போன சுப காரியங்கள் இனி கைகூடி வரும். சொந்த ஊர் நிகழ்ச்சிகளில் முன்னுரிமை அளிக்கப்படும். தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் வரும்.

சனி பகவானால் ஏற்படும் பலன்கள்: ராசிக்கு 5ம் வீட்டில் சனி பகவான் தொடர்வதால் குடும்பத்தில் நிம்மதி தங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் எவ்வித வாக்குறுதியும் தர வேண்டாம். நீண்ட நாட்களாக தடைபட்டுக் கொண்டிருந்த புண்ணிய ஸ்தலங்களுக்கு இப்போது சென்று வருவீர்கள். இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தாரின் ஆதரவு உண்டு. பழைய நகையை கொடுத்துவிட்டு புது டிசைனில் நகைகள் வாங்குவீர்கள். மாமியாருக்கு மருத்துவச் செலவுகள் இருக்கும்.

கன்னிப் பெண்களுக்கு சோம்பல், அலர்ஜி நீங்கும். தடைபட்டுக் கொண்டிருந்த கல்யாணம் கை கூடி வரும். மாணவ - மாணவிகளுக்கு பெற்றோரின் ஆதரவு உண்டு. எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். வியாபாரித்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து புது சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். சிலர் கடையை விரிவுபடுத்துவார்கள். அனுபவம் மிகுந்த வேலை ஆட்களை பணியில் அமர்த்துவீர்கள். உணவு வகைகள், கெமிக்கல், எலக்ட்ரிக்கல் -எலெட்ரானிக்ஸ் மூலம் நல்ல லாபம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்கு தாரர்களிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு வரும்.

உத்தியோகத்தில் எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு இப்போது கிடைக்கும். மேலதிகாரியே வியக்கும் அளவுக்கு சில வேலைகளை செய்து காட்டுவீர்கள். கணினி துறையினருக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். பார்வைக் கோளாறு, முகுது வலி வரும். கலைத் துறையினருக்கு பழைய நிறுவனத்தில் இருந்து வாய்ப்புகள் வரக்கூடும். உங்களின் படைப்புகள் பேசப்படும். மொத்தத்தில் இந்த தமிழ் புத்தாண்டு தடைகளைத் தாண்டி தடம் மாறாமல் பயணித்து இலக்கை எட்டும் வருடமாக அமையும்.

பரிகாரம்: தருமபுரி அருகே மொடக்கேரி கிராமத்தில் 16 அடி உயரத்தில் மகாகாளி வாராகி அம்மனை தேய்பிறை பஞ்சமியில் தேங்காய், பூசணி, எழுமிச்சை பழ விளக்கேற்றி வழிபடுங்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

விருச்சிகம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் சிறப்பான வெற்றி யாருக்கு?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in